செய்திகள் :

Trump: "அமைத்திக்கான நோபல் பரிசுக்கு என்னைவிட தகுதியான நபர் யாருமில்லை" - இன்னும் ஆசை போகாத ட்ரம்ப்

post image

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன்... எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்” என்று பலமுறை கூறிக்கொண்டிருந்தார்.

ஆனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு கிடைத்தது என்னவோ வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்குத்தான். இதில் ட்ரம்பிற்குக் கடும் அதிருப்தி.

இருந்தும் அமைதியை முன்னெடுக்கிறார் என்று மரியா ட்ரம்பிடமே அவருக்குக் கிடைத்த நோபல் பரிசைச் சமர்ப்பித்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
ஆனாலும், ட்ரம்பிற்கு இன்னும் நோபல் பரிசு ஆசை விடவில்லை போலும்.

நாளை (அக்டோபர் 9) 2026-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நேரத்தில் நேற்று (அக்டோபர் 7) ட்ரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், “நோபல் பரிசு வரலாற்றிலேயே என்னை விட அதற்குத் தகுதியான நபர் வேறு யாருமே இருந்ததில்லை.

நான் எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டுவந்தேன். இந்த உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துபோவதைத் தடுத்து நிறுத்தினேன்.

நோபல் அமைதிப் பரிசு வரலாற்றிலேயே என்னை விட அதற்குத் தகுதியான நபர் வேறு யாருமே இல்லை என்று மரியா கொரினா மச்சாடோ என்னிடம் கூறினார்” என்று பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி... தொகுதிப் பங்கீட்டில் மோதல் - பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட (403 தொகுதிகள்) உத்தரப்பிரதேச மா... மேலும் பார்க்க

சத்யபாமா உருவக்கேலி விவகாரம்: திருச்சியில் ஸ்டாலினுக்கு எதிராகப் புகாரளித்த தவெக மகளிர் அணி

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின்.அப்போது மேடையில் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

"கேரளாவில் AIIMS-க்கு அடிக்கல் நாட்டாமல் அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கமாட்டேன்" - சுரேஷ் கோபி ஆவேசம்

கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் நிலவும் காலதாமதத்தை எதிர்த்து காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 2 அன்று, டெல்லி சன்சத் மார்க் காவல் நிலையம் எதிரே பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஏசிபி ... மேலும் பார்க்க