செய்திகள் :

Ramayana: 'ராமாயணா' நிகழ்வில் 'ஜெய் ஶ்ரீராம்' சொன்ன பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்; வைரலாகும் வீடியோ

post image

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

Ramayana Movie
Ramayana Movie

பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். உலகத்திலேயே அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட யூடி

யூபர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்வில் ரசிகர்களை நோக்கி அவர், "ஜெய் ஸ்ரீராம்" எனக் கூறிய காணொளிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்வில் ரன்பீர் கபூர் பேசுகையில், "மிஸ்டர் பீஸ்ட், இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் செய்த அனைத்து விஷயங்களுக்கும் நாங்கள் அனைவரும் மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகிறோம்.

ராமாயணமும் ஸ்ரீ ராமரும் நாம் பிறந்த நாளிலிருந்தே நம் ஆழ்மனதில் மிக ஆழமாகப் பதிந்தவர்கள். ஆனால் உங்களுக்கு எளிதாகப் புரியும்படி சொல்வதானால், ராமர் என்பவர் ஒருபோதும் ஹீரோவாக இருக்க முயற்சித்தவர் அல்ல.

Ranbir Kapoor & Mr. Beast
Ranbir Kapoor & Mr. Beast

அவர் முழுமையான மனிதனின் அடையாளமாகத் திகழ்பவர். தன் கடமைக்காகவும் அனைத்தையும் தியாகம் செய்தார். நமது கலாசாரத்தில் 'தர்மா' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது, அதற்கு 'கடமை' என்று பொருள்.

இந்தத் திரைப்படத்தின் மூலம் எங்கள் கலாசாரம், எங்கள் வரலாறு எங்கிருந்து தொடங்கின என்பதைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும்" எனப் பேசியிருக்கிறார்.

Oscars: "ஆஸ்கர் தேர்வில் அரசியல் இருக்கிறது!" - அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்

ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படமான 'கோந்தல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலி... மேலும் பார்க்க

சொத்தில் ரூ.2490 கோடி இழப்பு; ஆனாலும் 'பணக்கார நடிகர்' அந்தஸ்தை ஷாருக்கான் தக்கவைத்து எப்படி?

இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப... மேலும் பார்க்க

Radhika Apte: "அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை!" - ராதிகா அப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தே | Radhika Apteதனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத... மேலும் பார்க்க

'பெருமையால் அழுகிறேன்..!'- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்... மேலும் பார்க்க

பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்; என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதி... மேலும் பார்க்க

'துவா'வுக்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க