செய்திகள் :

Dorothy: "இனி படம் எடுக்க வேண்டாம் என்றிருந்தேன்; ஆனால், 'டோரதி' படம்..." - இயக்குநர் மிஷ்கின்

post image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

திரைத்துறையின் முக்கிய இயக்குநர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டிப் பேசி வருகிறார்கள்.

இயக்குநர் மிஷ்கின் கனடாவில் இப்படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

Dorothy Movie
Dorothy Movie

'டோரதி' திரைப்படம் பற்றிப் பேசி அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், "இப்போதுதான் 'டோரதி' திரைப்படம் பார்த்துவிட்டு வருகிறேன். இந்தச் சமூகத்தில் ஆண் என்ற பெயரில் நாம் பெண்களுக்கும், பெண்களாக உருமாறியிருக்கும் திருநங்கைகளுக்கும் எவ்வளவு கொடுமைகளைச் செய்திருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு திருநங்கையை நாம் இரவில் பார்க்கும்போது, அவளை ஓர் அருவருப்பான எச்சிலைப் போலவும், விலங்கை விடக் கேவலமாகவும்தான் பார்க்கிறோம். ஆனால், நான் அவர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். என்னுடைய முந்தைய திரைப்படத்தில்கூட அவர்களைப் பற்றி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் புகைப்படத்தைப் பார்த்தேன். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப் போல அவருடைய முகம் அவ்வளவு கனிந்திருந்தது.

அவர் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறார், இனியும் பண்ணப்போகிறார். ஆனால், இந்த ‘டோரதி' மிக மிகச் சிறந்த திரைப்படம். திரையரங்கிற்குள் சென்று ஒரு படத்தை வெறும் படமாக மட்டும் பார்த்துவிட்டு வரக் கூடாது.

வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுச் சிந்திக்க வேண்டும். அது மிக உயர்ந்த கருத்துக்களைச் சொல்லும்போது நம் குடும்பத்தாரிடம் பகிரலாம்.

Mysskin
Mysskin

சில நேரங்களில், ஆண்களை உறுத்தும் சில சங்கடமான உண்மைகளைத் திரைப்படம் பேசும்போது, அதை நாம் மிகுந்த தர்மத்தோடும், நியாயத்தோடும், உண்மையோடும் யோசித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அந்த வகையில் 'டோரதி' மிக உண்மையான படம். இந்திய திரைப்பட வரலாற்றின் 10 மிகச் சிறந்த படங்களைப் பட்டியலிட்டால், அதில் கண்டிப்பாக இந்தப் படம் இருக்கும். என் வாழ்வில் நான் கால் தொட்டு முத்தமிட்ட ஒரே மனிதர் இளையராஜா மட்டும்தான்.

என் தாயின் காலைக் கூட நான் தொட்டு முத்தமிட்டதில்லை. இளையராஜாவுக்குப் பிறகு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கால்களை நான் தொட்டு முத்தமிடுவேன்.

அந்த அளவிற்கு இந்தப் படம் என் மனதைத் தொட்டுவிட்டது. அணுகுண்டை எந்தப் பெண்ணும் கண்டுபிடிக்கவில்லை, ஆண்கள்தான் கண்டுபிடித்தார்கள். இந்த உலகத்தை அழிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் கண்டுபிடித்தது ஆண்தான்.

ஆனால் பெண்கள் மிகவும் அமைதியாக, ஆண்களால் மிதிக்கப்பட்டும் அலங்கோலப்படுத்தப்பட்டும்கூட, அவர்களுக்கு உதவி செய்துகொண்டும் ஆண்களைப் பெற்றுப்போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

இது மிக மிக முக்கியமான, மேன்மையான திரைப்படம். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தையும் பார்க்க வேண்டிய படைப்பு.

Dorothy Movie
Dorothy Movie

ஒரு இயக்குநராக நான் ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் அவ்வளவு கஷ்டப்படுவேன். ஆனால் என்னை விட 100 மடங்கு கஷ்டப்பட்டு, ஒவ்வொரு ஃபிரேமையும் ஒரு கவிதை போல அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இதைத் தலையில் வைத்து நாம் கொண்டாட வேண்டும். நான் எடுத்த திரைப்படங்களை விடவும் இது மிகச் சிறந்த படம். இந்த ஆண்டில், உலக அளவில் யாரும் எடுக்காத ஒரு மிகச்சிறந்த படமாகவே இதை நான் கருதுகிறேன்.

இரண்டு படங்கள் எடுத்து முடித்தும் 6 வருடங்களாக என் படங்கள் வெளியாகவில்லை. 'இனி படமே எடுக்கக் கூடாது, ஒதுங்கிவிடலாம்' என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எனக்கு மீண்டும் படம் இயக்க வேண்டும் என்ற தைரியமும் உத்வேகமும் கிடைத்திருக்கிறது. நான் இந்தப் படத்தை 10, 20 முறை பார்ப்பேன். மற்றவர்களையும் பார்க்கச் சொல்வேன். அதை என் கடமையாக நினைக்கிறேன்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

Suriya: "ஒரு முட்டாள் பதிவு போட்டான் என்பதற்காக..." - ரசிகர்கள் கூட்டத்தில் சூர்யா

சூர்யாவுக்கு 'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அத்தோடு தீபாவளி வெளியீடாக மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அவர் நடித்திருக்கு... மேலும் பார்க்க

"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" - என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.அமைச்ச... மேலும் பார்க்க

"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" - 'மொத ராத்திரி' இயக்குநர்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’.மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​ப... மேலும் பார்க்க

'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன?

நெட்பிளிக்ஸில் 2020 ஆம் ஆண்டு வெளியான 'Never Have I Ever' தொடர் மூலம் புகழ்பெற்றவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். கன்னடாவில் பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன். தமிழ் பின்னணியைக் கொண்டவர். இலங்கை இவரது பூ... மேலும் பார்க்க

Dorothy: ``கார்த்திக் சுப்புராஜ் மீது பொறாமையாக இருக்கிறது" - இயக்குநர் மணிரத்னம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 25-ம் தேதி) வெளியான படம் டோரதி. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்... மேலும் பார்க்க

Sigma: ``ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பாவைப் போலவே இருக்கிறார்" - நடிகர் சிரஞ்சீவி

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரோடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்து... மேலும் பார்க்க