செய்திகள் :

"இதை என்னால் நம்ம முடியவில்லை, பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.!"- நானா படேகருக்கு குஷ்பு இரங்கல்

post image

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 75.

கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

நானா படேகர்
நானா படேகர்

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நானா படேகருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அரசியல்வாதியும், நடிகையுமான குஷ்பு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இதை என்னால் நம்ம முடியவில்லை. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மிகுந்த வேதனையில் இருக்கிறேன். சிறந்த நடிகர், தனக்கென சொந்த சிந்தனையும், நம்பிக்கையும் கொண்டவர். எளிமையான மனம் கொண்ட மனிதர்.

அவருடன் பணியாற்றும் பாக்கியமும், பெருமையும் எனக்கு கிடைத்தது. உங்களை மிகவும் மிஸ் செய்வோம் நானா பாவ்" என்று இரங்கல் தெரிவித்திருகிறார்.

நானா படேகர்
நானா படேகர்

ஹிந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல நடிகர் நானா படேகர் தமிழில் 'பொம்மலாட்டம்', 'காலா' போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது பணமோசடி புகார்; வைரலாகும் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள புதுமனை அம்மாள் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவப்பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர... மேலும் பார்க்க

Trump: "அமைத்திக்கான நோபல் பரிசுக்கு என்னைவிட தகுதியான நபர் யாருமில்லை" - இன்னும் ஆசை போகாத ட்ரம்ப்

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன்... எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்” என்று பலமுறை கூறிக்கொண்டிருந்தார்.ஆனால், 2025-ம் ஆண்டிற்க... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி... தொகுதிப் பங்கீட்டில் மோதல் - பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட (403 தொகுதிகள்) உத்தரப்பிரதேச மா... மேலும் பார்க்க

சத்யபாமா உருவக்கேலி விவகாரம்: திருச்சியில் ஸ்டாலினுக்கு எதிராகப் புகாரளித்த தவெக மகளிர் அணி

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின்.அப்போது மேடையில் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

"கேரளாவில் AIIMS-க்கு அடிக்கல் நாட்டாமல் அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கமாட்டேன்" - சுரேஷ் கோபி ஆவேசம்

கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் நிலவும் காலதாமதத்தை எதிர்த்து காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்... மேலும் பார்க்க