செய்திகள் :

Ramayana: "சின்ன சின்ன பிரச்னைகளைக் கண்டுக்காதீங்க!" - 'ராமாயணா' படம் குறித்து யஷ்

post image

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது.

Ramayana Trailer - Yash
Ramayana Trailer - Yash

நேற்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யஷ், ரசிகர்கள் இப்படத்தின் சின்ன சின்ன பிழைகளைப் பெரிதுபடுத்தாமல் பார்க்க வேண்டாம் என்று பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "நமது இந்திய இதிகாசத்தை உலக மேடையில் மிக உயரமாகக் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தனது பணம், புகழ் என எல்லாவற்றையும் பந்தயம் கட்டி இந்தப் பிரமாண்டமான முயற்சியில் இறங்கியுள்ளார்.

மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். தயவுசெய்து கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் சின்ன சின்ன தவறுகள் அல்லது பிழைகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்காதீர்கள். திறந்த மனதுடன் இந்தப் படத்தைப் பாருங்கள்.

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர்களை நாம் இப்போது இழந்துவிட்டால், இந்திய சினிமா மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும்.

நடிகர் யஷ்
நடிகர் யஷ்

தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி என அனைத்துத் திரைத்துறை ரசிகர்களுக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும் நான் வைக்கும் ஒரே கோரிக்கை இதுதான்.

இந்த ஒரு முறை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது இந்தியக் கதையின் பிரமாண்டத்தை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்.

லாஸ் ஏஞ்சலிஸில் மிக வசதியாக பிசினஸ் செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, ஆஸ்கர் விருதுகளை வென்றாலும் 'நமது இந்திய சினிமா உலக அளவில் இந்த உயரத்தை அடைய வேண்டும், அப்போதுதான் எனக்கு முழு மகிழ்ச்சி' என்று என்னிடம் கூறுவார். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை நாம் கொண்டாட வேண்டும்!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Tiger Shroff: "வெளிநாட்டு வேலை, அதிக பணம்..." - துப்பாக்கியால் சுட்டவர்கள் சிக்கியது எப்படி?

மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனா... மேலும் பார்க்க

ராமாயணம் திரைப்படம்: 18 மாத உழைப்பு; 4,500 நகைகள்! 3 சாம்ராஜ்யாங்களுக்கு உருவான பிரமாண்ட ஆபரணங்கள்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காவியத் திரைப்படம் ‘ராமாயணம்’. சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இ... மேலும் பார்க்க

Tiger Shroff: "அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே தகுந்த பதிலடி" - ஏக்நாத் ஷிண்டே

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் காரைக் குறிவைத்து மும்பையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே தகுந்த பதிலடி கொ... மேலும் பார்க்க

AI: “என் முகத்தைப் பயன்படுத்தாதீர்கள்; மீறினால்..!” – நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை!

தனது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி AI மூலம் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய X சமூக வலைதள பதிவில், “ஏற்கெனவே... மேலும் பார்க்க

"என் வாழ்க்கை என்னுடன் புதைக்கப்படும்" - தனது வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து சல்மான் கான் பளீச்!

இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனது 'காஃபி வித் கரண் 9' நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் சல்மான் கானை நேர்காணலுடன் கூடிய விவாதத்திற்கு அழைத்து இருந்தார். இதில் சல்மான் கான் பல்வேறு பிரச்னைகள் ... மேலும் பார்க்க

"இயக்குநராவது குறித்து கனவில்கூட நினைத்ததில்லை" - அமிதாப் பச்சன் சொல்லும் காரணம் என்ன?

பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனக்கென நிலையான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். பாலிவுட்டில் அதிகமாக நடிகர்கள் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்புப் பணிகளில... மேலும் பார்க்க