செய்திகள் :

நர்ஸ் வேடத்தில் வீட்டிற்கே சென்று மயக்க ஊசி; நகைக்காக நடந்த கொடூரம்; ஈரோட்டில் திக் திக் சம்பவம்

post image

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள கொளாநல்லியைச் சேர்ந்தவர் 60 வயதான வள்ளியம்மாள். வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த 15‌ ம் தேதி மாலை வள்ளியம்மாள் வீட்டிற்குச் சென்ற இரண்டு நபர்கள் தங்களை செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் என அறிமுகமாகியுள்ளனர்.

அரசின் அனைவருக்கும் இலவச மருத்துவத் திட்டம் மூலம் மருத்துவம் பார்க்க வந்திருப்பதாகக் கூறி அவருக்குப் போலியாக பரிசோதனை செய்துள்ளனர். வள்ளியம்மாளின் கால் வலிக்கு ஊசி செலுத்துவதாகக் கூறி மயக்க ஊசியைச் செலுத்தி மயக்கமடையச் செய்திருக்கிறார்கள். வள்ளியம்மாள் மயங்கியதும் அவரின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்ததும், ஏமாற்றப்பட்டதை அறிந்த வள்ளியம்மாள் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். கொடூரமான இந்தத் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றறத்தில் ஈடுபட்டதாக நிசாலினி மற்றும் சுந்தர் ராஜன் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சுந்தர் ராஜன்
சுந்தர் ராஜன்

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஈரோடு, மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன்(26) மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த நிசாலினி(24) இருவரும் காரில் சென்று செவிலியர்கள் போல வெள்ளை நிற கோட் அணிந்து நூதன திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சி.சி.டி.வி கோமரா பதிவுகளைப் பார்த்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் நடுப்பாளையத்தை அடுத்த அண்ணாமார் கோயில் அருகில் மலையம்பாளையம் போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது இருவரும் காரில் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குற்றப்பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

சென்னை: பெண்கள் விடுதிக்குள் புகுந்த எலக்டிரிஷியன் - தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை, வேளச்சேரி பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் 27 வயது பெண் ஒருவர் தங்கி, படித்துவருகிறார். இவர் 17.10.2026-ம் தேதி இரவு விடுதியில் உள்ள அறையில் தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, 18-ம் த... மேலும் பார்க்க

மெத் கடத்தல்: ”செய்தியில CM விஜய் போட்டோ போட்ட, காலி பண்ணிடுவேன்”- நிருபர்களை மிரட்டும் தவெக-வினர்

நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர் தவெக-வில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா இலங்கைத் தமிழர். வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர... மேலும் பார்க்க

மும்பையில் மீண்டும் துப்பாக்கி சத்தம் : நிழல் உலக காலியிடத்தைநிரப்பும் வட இந்திய கேங்ஸ்?

மும்பையில் 2000ம் ஆண்டு வரை இருந்த ரவுடிசம் மற்றும் மாபியா போன்ற நிழலுக தாதாக்கள் தொடர் என்கவுண்டர் மூலம் பெரும் முயற்சிகளுக்கு பின் ஒழிக்கப்பட்டனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு ரவுடியோ... மேலும் பார்க்க

'புல்வாமா, தொடர்பான பணம் உங்க வங்கி கணக்கிற்கு வந்துள்ளது' - ஓய்வு நீதிபதியிடமே ரூ.2.50 கோடி பறிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெற்கு ஜோதி நகர் சத்யவிஹார் காலனியைச் சேர்ந்தவர் கணபத் சிங் பண்டாரி (90). ஓய்வுபெற்ற நீதிபதியான இவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்... மேலும் பார்க்க

பெருந்துறை:தாலிக்கொடிக்காக இளம்பெண் துடிதுடிக்க கொலை - செவிலியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த செவிலியர் உத்ரா பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14- ம்‌ தேதி மாலை திடீரென காணாமல் போனார். பணி... மேலும் பார்க்க

பயணிகளை அரிவாளால் வெட்டிய போதை ஆசாமிகள்; திருச்சி ரயில் நிலையத்தில் அதிர்ச்சி... கைது செய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய தம்பி என்பவரின் மகன் கோவிந்தராசு (வயது: 46). இவர், தனது நண்பர் மகாதேவனோடு திருப்பூரில் இருந்து மங்களூர் விரைவு வண்டியில் பொதுப்பெட்டியில் பயணம் செய்து திருச்சி ... மேலும் பார்க்க