செய்திகள் :

15 ஆண்டாக போராடிய கிரிக்கெட் வீரர்: தே.ஜ.கூட்டணிக்கு மாறியவுடன் யூசுப் பதானுக்கு கிடைத்த நிலம்

post image

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் அரசியலில் அணி மாறிய சில மாதங்களுக்குள், அவருக்கு குஜராத் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பரிசு கிடைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் யூசுப் பதான் வதோதராவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை அரசிடமிருந்து வாங்க முயன்றார். ஆனால் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்ததால் அவரால் அந்த நிலத்தை பெற முடியவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம், மேற்கு வங்க சட்டமன்ற முடிவுகள் வந்தவுடன், மம்தா பானர்ஜிக்கு எதிராக கிளர்ச்சி செய்து, 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அணி மாறி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாறினர்.

அவர்களில் யூசுப் பதானும் ஒருவர். யூசுப் பதான் 2024 இல் பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக யூசுப் பதான் வெற்றி பெற்றார். யூசுப் பதான் விரும்பிய சர்ச்சைக்குரிய நிலம், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில், வதோதராவின் தண்டல்ஜா பகுதியில் உள்ள பதான் குடும்ப வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் பதான் சகோதரர்கள் யூசுப் மற்றும் இர்ஃபான் குடும்பம் மற்றும் பெற்றோருடன் வசிக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற அந்தஸ்தின் காரணமாக பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, அவர் 2012ம் ஆண்டு அந்த நிலத்தை சொந்தமாக்க முயன்றார். பல வருட சட்ட மற்றும் நிர்வாகச் போராட்டத்திற்கு பிறகு, சர்ச்சைக்குரிய நிலப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாநில நிர்வாகம் ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

அதன் படி யூசுப் பதான் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற முறையில் பாதி நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பரிசாக பெற உள்ளார். மற்ற பாதிக்கு அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். பாதி நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடியாகும்.

யூசுப் பதான் 2012ம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக சர்ச்சைக்குறிய அந்த நிலத்தை 99 வருட குத்தகைக்கு கொடுக்கும்படி யூசுப் பதான் கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் உள்ளூர் மாநகராட்சி நிர்வாகம் யூசுப் பதானுக்கு கொடுக்க முடிவு செய்தது. ஆனால் பின்னர் மாநில அரசு அதனை நிராகரித்துவிட்டது. பொதுச் சொத்துக்களுக்கு வெளிப்படையான பொது ஏலம் தேவை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை நிராகரித்தனர். ஆனாலும் அந்த நிலத்தை யூசுப் பதான் தான் பயன்படுத்தி வந்தார்.

பாஜகவால் நடத்தப்படும் வதோதரா மாநகராட்சி நிர்வாகம், 2024 லோக்சபா தேர்தலில் திரிணாமுல் டிக்கெட்டில் யூசுப் பதான் வெற்றி பெற்றவுடன், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது. இந்த நோட்டீசை எதிர்த்து பதான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் பதானை கடுமையாக விமர்சித்தது. தற்போது பதான் அணி மாறி இருப்பதால் நிலம் அவருக்கு மாற இருக்கிறது.

காவல்துறை வாகன சோதனை: பதறிய கணவர்; நடுரோட்டில் விழுந்த மனைவியை விட்டுவிட்டு எஸ்கேப்! | Video

உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டம், ருத்ராபூர் (Rudrapur) பகுதியில் உள்ள த்ரிசூல் சௌக் (Trishul Chowk) பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, முற... மேலும் பார்க்க

45 நிமிடங்கள் காத்திருந்து துப்பாக்கிச்சூடு; டைகர் ஷெராப்பை சுட்ட 3 பேர் ராஜஸ்தானில் கைது!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நேற்று இரவு இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் உயிர் தப்பியபோதிலும், அவரது கார் ஓட்டுநர் காயம் அடைந்தார். இது குறித்து போலீஸ... மேலும் பார்க்க

5 சுற்று துப்பாக்கிச்சூடு; சில நொடிகள் இயங்க மறுத்த துப்பாக்கி; நூலிழையில் உயிர் தப்பிய டைகர் ஷெராப்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நேற்று மாலை மும்பை அந்தேரி ஜுகுவில் உள்ள கால்பந்து மைதானத்தில் இருந்து காரில் புறப்பட்ட போது இரண்டு பேர் அவரை நோக்கி சுட்டனர். மொத்தம் 5 ரவுண்ட் சுடப்பட்டதாக கூறப்படுகிறது... மேலும் பார்க்க

ஈக்வடாரில் அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்த பாதிரியார் உயிரிழப்பு! - Video

ஈக்வடார் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகரில், தேவாலயத்தில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் மீது பெரிய மரச் சிலுவை விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.என்ன நடந்தது?அக்டோப... மேலும் பார்க்க

நொய்டா: நூடுல்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகள், பெற்றோர் இறந்ததில் திருப்பம்; சொத்து பிரச்னையில் தற்கொலையா?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வந்த மகேஷ் என்பவரும், அவரது மனைவி லலிதா மற்றும் மூன்று குழந்தைகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு படுத்தனர். காலையில் அவர்கள் இறந்... மேலும் பார்க்க

`எங்கள் பேச்சை கேட்காமல் சல்மான் கானுடன் பணியாற்றுகிறார்'- நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் நேற்று மாலை மும்பை ஜுகு பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் இருந்து தனது காரில் கிளம்பியபோது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத... மேலும் பார்க்க