செய்திகள் :

'பல்லவன் இல்லத்துக்கு மாற்றப்படுகிறதா தலைமைச் செயலகம்?' - அதிகாரிகள் சொல்வதென்ன?

post image

1200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்ட தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், பட்டினப்பாக்கம் மீனவ கிராமத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் என அரசு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. நிலவரத்தை அறிய தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் சில அதிகாரிகளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்
முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே புதிய தலைமைச் செயலக திட்டம் குறித்து அறிவித்திருந்தார். அடுத்த சில நாட்களிலேயே பட்டினப்பாக்கத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு எதிரே கடலை பார்த்தபடிக்கு ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட விரிவான திட்ட அறிக்கையையும் அரசு கேட்டது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட அரசு மும்மரம் காட்டுவதை அறிந்த மீனவ கிராமத்தினர் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவ கிராமத்தினர் ஒன்று கூடி அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தினர். முதல்வர் மீனவர்களின் பக்கம்தான் நிற்பார் என அமைச்சர்கள் பேசினாலும், அந்த புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடுவதற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகமலே இருந்தது.

டிப்போ

இந்நிலையில்தான் பல்லவன் டிப்போ அமைந்திருக்கும் இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சில சீனியர் அதிகாரிகள், 'கிண்டி, பல்லவன் இல்லம், பட்டினப்பாக்கம் என இந்த இடங்கள் எல்லாமே ஆரம்பத்திலேயே எங்களின் பரிசீலனையில் இருந்ததுதான். இப்போது பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போகிறோம் என்கிற தகவலில் உண்மையில்லை. இந்த சமயத்தில் அதைப் பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. பட்டினப்பாக்கம் திட்டத்தையும் இன்னமும் முழுமையாக கைவிடவில்லை. எல்லாமே பரிசீலனையில்தான் இருக்கிறது' என்றனர்.

'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! - மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 16-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு > அரசு, உள்ளாட்சி ... மேலும் பார்க்க

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! - எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!

அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) தலா ஒரு பங்கை இலவசமாக வழங்கப்போவதாக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.தனது 'X'... மேலும் பார்க்க

"SIR அவசியம்... அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது" - சி.முருகன் IAS

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென்கிற குரல்கள் நாடெங்கும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.எஸ்.ஐ.ஆர் என்ற தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை எனவும், தேர்தல் ஆணையம் ஆளும் ... மேலும் பார்க்க

'விடிவதற்குள் தேங்கிய நீர் வடிந்துவிட்டது; திமுக அரசின் சரித்திரம் இது.!'- கே.என் நேரு

திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைத் திட்டப் பணிகளைத் தொடர்ந்து, திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று முன்னாள் நகராட்சி ... மேலும் பார்க்க

`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள வடமாம்பாக்கம் மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். மனுவில் அவர், ... மேலும் பார்க்க

Jailer 2: 'திரையிடப்பட்ட ரஜினி மேஷ் அப்; கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!- மன்னிப்புக் கேட்ட திரையரங்கம்!

சென்னை அம்பத்தூரில் முருகன் திரையரங்கில் ஜெயிலர் 2 படத்துக்கு இடையில் ரஜினி ரசிகர்களை குஶுப்படுத்த திரையிடப்பட்ட மேஷ் அப் வீடியோ விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. சமூகவலைதளங்களில் விஜய் ரசிக... மேலும் பார்க்க