செய்திகள் :

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! - எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!

post image

அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் (SpaceX) தலா ஒரு பங்கை இலவசமாக வழங்கப்போவதாக உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர்,

"அடுத்த ஆண்டு (2027), அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் எனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் இருந்து ஒரு பங்கை வழங்குவேன். இது பல திட்டங்களில் முதலாவதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 7.2 கோடியாகும். தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு சுமார் $146-க்கு வர்த்தகமாகி வரும் நிலையில், இந்த 7.2 கோடி பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தோராயமாக 10.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார்   ₹ 88,000+ கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), பொதுநல நிதிக்காக 5% பங்குகளை ஒதுக்குவதாக அறிவித்ததற்குப் பதிலளித்த மஸ்க்,

"பங்குகளை ஒரு நிதியத்திற்குத் தருவதற்குப் பதிலாக, நேரடியாக பொதுமக்களுக்கே கொடுப்பதே சிறந்தது" என்று கூறி இத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

எனினும், சிறார்களுக்குப் பங்குகளை மாற்றுவதற்கான வயது வரம்பு, சட்ட நடைமுறைகள், வரிக் கொள்கைகள் மற்றும் தகுதி நிபந்தனைகள் எவை என்பது குறித்த கூடுதல் விவரங்களை மஸ்க் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவின் எதிர்காலத் தலைமுறையினரை ஆரம்பக்கட்டத்திலேயே பங்குச்சந்தை முதலீட்டாளர்களாக மாற்றும் மிகப்பெரிய முயற்சியாக இது பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

"SIR அவசியம்... அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது" - சி.முருகன் IAS

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென்கிற குரல்கள் நாடெங்கும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.எஸ்.ஐ.ஆர் என்ற தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை எனவும், தேர்தல் ஆணையம் ஆளும் ... மேலும் பார்க்க

'விடிவதற்குள் தேங்கிய நீர் வடிந்துவிட்டது; திமுக அரசின் சரித்திரம் இது.!'- கே.என் நேரு

திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கைத் திட்டப் பணிகளைத் தொடர்ந்து, திருப்புகழ் கமிட்டியின் நீண்டகாலப் பரிந்துரைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று முன்னாள் நகராட்சி ... மேலும் பார்க்க

`கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல்’ - அரக்கோணம் தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் பகீர் புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள வடமாம்பாக்கம் மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். மனுவில் அவர், ... மேலும் பார்க்க

Jailer 2: 'திரையிடப்பட்ட ரஜினி மேஷ் அப்; கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!- மன்னிப்புக் கேட்ட திரையரங்கம்!

சென்னை அம்பத்தூரில் முருகன் திரையரங்கில் ஜெயிலர் 2 படத்துக்கு இடையில் ரஜினி ரசிகர்களை குஶுப்படுத்த திரையிடப்பட்ட மேஷ் அப் வீடியோ விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. சமூகவலைதளங்களில் விஜய் ரசிக... மேலும் பார்க்க

'தவெக அரசின் கீழ்தரமான அரசியல்; வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை'- கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீ... மேலும் பார்க்க

ஈரோடு கொங்கலம்மன் கோயில் வீதியில் குப்பைகளால் நிரம்பும் சாக்கடை: பொதுமக்கள் அவதி!

ஈரோடு மணிக்கூண்டு அருகே உள்ள கொங்கலம்மன் கோயில் வீதியில் சாக்கடை முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் பொதுமக்களும் கடைக்காரர்களும் புகார் தெரிவிக்கின... மேலும் பார்க்க