செய்திகள் :

Jailer 2: "100% எல்லோரும் ஏற்கும்படி படம் எடுக்க முடியாது" - எதிர்மறை விமர்சனங்களுக்கு சரவணன் பதில்

post image

சரவணன் முதன்மைக் கதாபாத்தித்தில் நடித்திருக்கும் 'சட்டமும் நீதியும்' வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பில், "நீங்கள் ஜெயிலர் -1 படத்தில் நடித்திருக்கிறீர்கள்.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஜெயிலர்- 2'-வும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சட்டமும் நீதியும்
சட்டமும் நீதியும்

ஆனால் சிலர் படத்தை எதிர்மறையாக விமர்சித்தும் இருக்கிறார்கள் இது குறித்து உங்கள் கருத்து என்ன?" என்று சரவணனிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "நான் தலைவரின் ரசிகன். 8-ஆம் வகுப்பில் இருந்து ரஜினி சாருக்காகக் கைதட்டி படம் பார்க்கிறேன்.

இன்றைக்கு வரைக்கும் அவர்தான் எனக்கு ஒரே நடிகர் தலைவர்... என்னைப் பொறுத்தவரைக்கும் ரஜினிதான் ஆஸ்தான நடிகர்.

100 சதவிகிதம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படி படம் எடுக்க முடியாது. சிலர் ஆதரவு தெரிவிப்பார்கள், சிலர் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.

ஜெயிலர் 2
ஜெயிலர் 2

ஆனால் எனக்கு 'ஜெயிலர்- 2' படம் பிடித்திருக்கிறது. மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். தலைவரை எந்த அளவுக்கு இந்தப் படத்தில் நடிக்க வைக்க முடியுமோ அந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார்.

அதற்காக நான் நெல்சனிற்காகத்தான் அதிக பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"சினிமாவை AI அழித்துவிடாது" - சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏஐ குறும்படம்; சாதனை படைத்த சென்னை இளைஞர்கள்

சென்னையில் இயங்கி வரும் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் நிறுவனமான ஹைபிரிட் ஸ்டுடியோ சமீபத்தில் 'விங்ஸ் ஆஃப் ஃபையர்' என்கிற குறும்படத்தை வெளியிட்டிருந்தது. Hybrid Studio Teamஅது முழுக்க முழுக்க ஏ.ஐ-யால் உர... மேலும் பார்க்க

Jailer 2: "Startup, Comics எழுத்தாளர், இயக்குநர் ஆசை..." - ரித்விக் பகிரும் 'Future Plans'!

'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரித்விக்கைப் பேட்டி கண்டோம். 'ஜெயிலர் 2' அனுபவம், படப்பிடிப்புத் தள... மேலும் பார்க்க

``சக மனிதர்களைப் படிக்கிறேன்... அதன்படி நடிக்கிறேன்!'' - நடிகர் அருள்தாஸ் | Photo Album

நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்... மேலும் பார்க்க

Teejay: "கடந்த 10 வருடங்களாக நான் அமைதியாகவே இருந்தேன்" - டீஜே மீது பிரகதி புகார்; பின்னணி என்ன?

'தேன் குடிக்க', 'ஆசை' உள்ளிட்ட சுயாதீனப் பாடல்களை பின்னணிப் பாடகி பிரகதி குருபிரசாத்தும், பாடகர் டிஜேவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். டிஜே-யுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு அவர் தனக்கு ராயல்டி தருவதாக... மேலும் பார்க்க

மாநகரம் : கொலாஜ் ஓவியம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 34

`சினி'ஸ்கோப் 34மாநகரம்நள்ளிரவு நேரம். போக்குவரத்தற்ற நடுச்சாலை. வின்னிங்கின் கைப்பிடியில் ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். வின்னிங் துப்பாக்கியை அந்தச் சிறுவனின் தலையில் வைத்திருக்கிறான். வின்னி... மேலும் பார்க்க

நடிகர் சபேஷ் கார்த்திக் திடீர் மரணம் - தேவா குடும்பத்தை துரத்தும் சோகம்

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகன் சபேஷ் கார்த்திக் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37.கடந்த வாரம் மறைந்த தேவாவின் சகோதரும் கடந்தாண்டு இதே அக்டோபர் மாதம் மறைந்தவரும... மேலும் பார்க்க