செய்திகள் :

குலசை தசரா திருவிழா: விண்ணைப் பிளந்த பக்தர்களின் காளி கோஷம்; விமரிசையாக நடந்த மகிஷாசூரசம்ஹாரம்

post image

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், ”குலசை” என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசராத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டு தசராத்திருவிழா, கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர்.

மகிஷாசூரன்
மகிஷாசூரன்

திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று காலை முதல் மாலை வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பிறகு மகிஷாசூரமர்த்தினி கோலத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரை நோக்கிப் புறப்பட்டார். அங்கு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது.

முதலில் மகிஷாசூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக எருமை முகனையும், இறுதியாக சேவல் முகத்தோனையும் சம்ஹாரம் செய்தார். கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், “ஓம் காளி... ஜெய் காளி...” கோஷம் எழுப்பினர். சம்ஹாரம் முடிந்து இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் கடற்கரை மேடையில் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை நடந்தது.

எருமை முகன்
எருமை முகன்

பின்னர், 2 மணியளவில் சாந்தாபிஷேகத்தைத் தொடர்ந்து 3 மணிக்கு திருத்தேர், நிலையம் வந்ததடைந்தது. அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம் நடந்ததும், பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது. இன்று மாலை 4:30 மணிக்கு அம்மன் திருக்கோயிலை வந்தடைந்ததும் காப்பு களைதல் நடைபெறுகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், புஷ்பாஞ்சலியுடன் தசராத்திருவிழா நிறைவு பெறுகிறது.

குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சூரசம்ஹாரத்தைக் காண கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். பிளாஸ்டிக்தாள், விரிப்பிற்காகக் கொண்டு வந்திருந்த டிஜிட்டல் பேனர்களை தலையில் பிடித்தபடியே மழையிலிருந்து தற்காத்துக் கொண்டனர்.

மாலை முதல் இரவு வரை மழை சாரலாக நீடித்தது. வழக்கமாக மின்தடை ஏற்படாத வகையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்ப்படும். ஆனால், இந்தாண்டு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கினால் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மின் தடையால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சம்ஹாரத்தைக் காண கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
சம்ஹாரத்தைக் காண கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

பல பகுதிகளில் மின் விநியோகம் சீராகாததால் இரவு 9:30 மணியைக் கடந்தும் இருள் சூழ்ந்தே காணப்பட்டது. போக்குவரத்து ஓரளவு சீரமைக்கப்பட்டும் பல பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. திருகோயில் கருவறை முன்புள்ள மண்டபத்திற்குள் சினிமா பாடல்களுக்கு நடனமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையை ஆடல் பாடல்குழுவினர் குத்தாட்டம் போட்டதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை.

இதனால், ஆடல் பாடல் குழுவினருக்கு இடையே நடனமாடுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குலசேகரன்பட்டினத்தில் திரும்பும் திசையெங்கும் செவ்வாடை அணிந்த பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தது.      

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு கோவிலிலிருந்து சீர்வரிசை; நெகிழ வைத்த மதுரை தேனூர் கிராமம் மக்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அனைத்துச் சமூக மக்களும் ஒற்றுமையோடு மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தேனூர் கிராமத்தில் நடைபெற்ற பள்ளி வாசல் திறப்பு விழாவில் ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா 9ம்நாள்: அன்னை மீனாட்சி சிவபூசை திருக்கோலம்

நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவராத்திரி_திருவிழா 9ம்நாள் நவரா... மேலும் பார்க்க

தேவி கன்னியாகுமரி அம்மன் கோயில்: நவராத்திரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய அம்மன் தலம்!

சக்தி பீடங்களில் ஒன்றான கன்னியாகுமரி, திருநெல்வேலியிலிருந்து 82 கி.மீ. தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பகன், முகன் என்ற அசுரர் இருவர் தேவர்களுக்... மேலும் பார்க்க

வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் சுயம்வர கலாபார்வதி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

வேலூர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது, சுட்டெரிக்கும் வெயிலும், சுபிட்சத்தை அருளும் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலும்தான். வேலூரின் மையப் பகுதியில் உள்ள அந்த பிரமாண்டமான கோட்டையைக் காண சுற்றுலாப்... மேலும் பார்க்க

இங்கே சுந்தரர் பதிகம்பாடி ஈசனை வேண்டினால் வேண்டும் செல்வம் கிடைக்கும் - நாகை காரணேஸ்வரர் மகிமைகள்!

நாகப்பட்டினம், தமிழகக் கடற்கரை நகரங்களில் புகழ்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. வெளிநாட்டவரோடு சோழ மன்னர்கள் கடல் வணிகம் செய்த துறைமுகப் பட்டினம். நாகர் இன மக்கள் நிரம்ப வாழ்ந்ததால், இப்பெயர் பெற்... மேலும் பார்க்க

நெல்லை: புகழ்பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம்; அணிவகுத்த அம்மன் சப்பரங்கள் | Photo Album

நெல்லை: புகழ் பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம்! அணிவகுத்து காட்சியளித்த அம்மன் சப்பரங்கள்.!குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; விண்ணை முட்டிய 'ஓம் காளி ஜெய் காளி' முழக்கம் மேலும் பார்க்க