செய்திகள் :

இங்கே சுந்தரர் பதிகம்பாடி ஈசனை வேண்டினால் வேண்டும் செல்வம் கிடைக்கும் - நாகை காரணேஸ்வரர் மகிமைகள்!

post image

நாகப்பட்டினம், தமிழகக் கடற்கரை நகரங்களில் புகழ்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. வெளிநாட்டவரோடு சோழ மன்னர்கள் கடல் வணிகம் செய்த துறைமுகப் பட்டினம். நாகர் இன மக்கள் நிரம்ப வாழ்ந்ததால், இப்பெயர் பெற்றது என்றும், நாகராஜன் இத்தல ஈசனை வழிபட்டதால் நாகபட்டினம் என்றும் இத்தலம் பெயர்பெற்றது என்பார்கள்.

இங்குள்ள ஈசனின் திருநாமம் காரோணத்தார் என்பதாகும். கோயிலின் பெயர் காரோணம். ஆனால் இங்கே அம்பிகையின் திருநாமமான நீலாயதாக்ஷி கோயில் என்றால் பிரசித்தம்.

திருநாகை காரணேஸ்வரர் கோயில்

சுவாமிக்கு காரோணஸ்வரர் என்று திருநாமம் ஏற்பட புண்டரீகர் என்றொரு முனிவரே காரணம் என்பார்கள். ஒருமுறை புண்டரீக முனிவர் தவம் இயற்றினார். அவருடைய யாகத்தைத் தடுத்து, அதன் அவிர்பாகத்தை அக்னிதேவன் ஏற்க முடியாதவாறு அரக்கர்கள் இடையூறு செய்தனர். ஆனால், தமது பக்தியால், அரக்கர்களை திசை மாறச் செய்து யாகத்தை நிறைவேற்றினார் புண்டரீகர்.

பக்தியிலும் தர்மத்திலும் சிறந்த அவரை, மனித உடலோடு சேர்த்து ஏற்றுக்கொண்டார் சிவனார். காயத்தோடு ஆரோகணித்துக் கொண்டார் என்பதால், காய ஆரோகணேஸ்வரர் என்கிற திருநாமம் உண்டாகி அதுவே காலப்போக்கில் 'காரோணேஸ்வரர்' ஆகிவிட்டது.

சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்த ஈசனைப் பாடிப் போற்றியுள்ளார்.கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு காஞ்சியில் ஒரு கண் பார்வை கிடைத்தது. திருவாரூரில் மற்றொரு கண் பார்வையும் பெற்றார் ,அதன்பின் அவர் திருநாகை வந்து இந்த ஈசனை வழிபட்டார் என்கிறார்கள்.

மேலும் இத்தல ஈசனை அவர் பாடிப் புகழ நவமணியையும், ஆபரணங்களையும் பட்டு முதலான வஸ்திரங்களையும் உடைவாள் முதல் குதிரைவரையிலான பாதுகாப்பையும் பெற்றார் சுந்தரர். எனவே செல்வம் வேண்டுபவர்கள், இந்தத் திருத்தலத்தில், சுந்தரர் பாடிய பதிகத்தைப் பாடி ஈஸ்வரரை வணங்கினால், கட்டாயம் பயன் கிட்டும்.

திருநாகை ஈஸ்வரன் கோயில் அம்பிகை

திருக்கோயிலில் சுவாமி சந்நிதி, அம்மன் சந்நிதி இரண்டுக் கும் சேர்ந்தாற்போல் முகப் பில், சற்றே நீண்ட முன்விரிவோடு திகழ்கிறது ராஜதானி மண்டபம். இதன் ஓர் அங்கமாகவே அம்மன் சந்நிதி அமைந்துள்ளது எனலாம்.

இது அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்று. அம்பிகை நீலாயதாக்ஷியின் தமிழ்த் திருநாமம் அருள்மிகு கருந்தடங்கண்ணி. நின்ற திருக் கோலம்; அபய வரம் காட்டும் திருக்கரங்கள் இரண்டு; மீதமுள்ள இரு கரங்களில் பாசம்- அங்குசம் தாங்கியிருக்கிறாள். அம்பாளின் புன்னகை அன்பைப் பொழிகிறது.

ஆதிபுரம், ஆதீநகரம், பார்ப்பதீச்வரம், அகத்தீச்வரம், அரவநகரம் என்கிற பெயர் களையும் கொண்ட நாகையின் கல்விச் சிறப்பு, மிகவும் பிரபலமானது. இதற்குக் காரணம், இந்த அன்னையின் கருணையே என்கின்றன ஞானநூல்கள். இந்த அம்பிகையை தரிசித்து வழிபட்டால், பிள்ளைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம். பெண்களுக்கு சகல மங்கல வரங்களையும் அருளும் கற்பக விருட்சமாகவும் அருள்கிறாள், அம்பிகை நீலாயதாக்ஷி!

அம்பாள் சந்நிதியை வலம் வரும்போது, சற்றே முகப்பு நோக்கிய தாக, அழுகணிச் சித்தர் சந்நிதி அமைந்துள்ளது. இந்த ஆலயத் தின் தீர்த்தங்களான புண்டரீக தீர்த்தமும், தேவ தீர்த்தமும் கோயிலின் தெற்கிலும் மேற்கிலும் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் செல்பவர்கள், இங்கே அருளும் தியாக ராஜரை தரிசிப்பதால் பெரும்புண்ணியம் கிடைக்கப் பெறுகிறார்கள்.

திருநாகை ஈஸ்வரன் கோயில்

மூலவர் சந்நிதிக்கு அருகில் தியாகராஜர் சந்நிதியும் உண்டு. சப்தவிடங்கத் தலங்களில் நாகையும் ஒன்று. இங்கு எழுந்தருளியுள்ள தியாகேசர், அருள்மிகு சுந்தரவிடங்கர். இவரின் நடனம் பாராவாரதரங்க நடனம்; அலை போன்ற ஆட்டம் என்பார்கள். இவரை தரிசிக்க ராஜ யோகங்கள் உண்டாகுமாம்.

இங்கே கோள்கள் ஒன்பது பேரும் ஒரே திசை நோக்கியவாறு (சுவாமியை நோக்கிய வாறு) எழுந்தருளியுள்ளனர். இது அபூர்வமான அமைப்பு என்பர். மட்டுமன்றி சனி பகவான் தனிச் சந்நிதியும் கொண்டுள்ளார். தசரதச் சக்ரவர்த்தி சனியால் பீடிக்கப்பட்டு, அந்த தோஷம் நிவர்த்தியா வதற்காக, நாகைக்கு வந்து நீராடி, சிவனாரை வழிபட்டு, சூரியனுடைய பரிபூரண அருளையும் சனியின் நன்மைகளையும் பெற்றதாக வரலாறு. அதை நினைவுகூறும் வகையில், இங்கே சனிக்குத் தனிப் பிரதிஷ்டை. ஆக, சனி தோஷப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது, திருநாகைக் காரோணம்.

இப்படிப்பட்ட அற்புதமான தலத்தின் மகிமைகள் ஏராளம். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை அங்கு சென்று வழிபட்டு அருள்பெறலாம்.

நெல்லை: புகழ்பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம்; அணிவகுத்த அம்மன் சப்பரங்கள் | Photo Album

நெல்லை: புகழ் பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா தொடக்கம்! அணிவகுத்து காட்சியளித்த அம்மன் சப்பரங்கள்.!குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; விண்ணை முட்டிய 'ஓம் காளி ஜெய் காளி' முழக்கம் மேலும் பார்க்க

நெல்லை: சாளக்ராமம் கல் திருமேனியிடன் குழந்தை வடிவில் அருளும் ஸ்ரீ கிருஷ்ணப் பெருமாள் | Photo Album

நெல்லை: சாளக்ராமம் கல் திருமேனியிடன் குழந்தை வடிவில் அருளும் ஸ்ரீ கிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில்!விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர்: காலையில் தரிசனம் செய்தாலே அஸ்வமேத யாகம் செய்த பலன்! மேலும் பார்க்க

புரட்டாசி மகாளய அமாவாசை: அணைப்பட்டி வைகை கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

மகாளய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசைமகாலய அமாவாசை மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் திருவிழா; மழை வேண்டி, விவசாயம் செழிக்க வழிபாடு! Album

மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல் குமரருக்கு வேல் மலைமேல்... மேலும் பார்க்க

பகவான் கிருஷ்ணர் தர்ப்பணம் செய்த தலத்தில் வழிபட பித்ரு தோஷம் தீரும்... மகாளய அமாவாசை தலம்!

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில், 25 கி.மீ. தொலைவில் உள்ளது பூந்தோட்டம் என்னும் ஊர். இந்த ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் செதலைப்பதி அமைந்துள்ளது. இதையே திலதர்ப்பணபுரி என்று சொல்கிறார்கள். திலம்... மேலும் பார்க்க