செய்திகள் :

கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்

post image

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பல்லவி. இவர் பெரும்பாலும் தான் போகும் இடமெல்லாம் தன்னுடைய கைக்குழந்தையை எடுத்துச் செல்வார். இது பல முறை செய்திகளில் இடம்பெற்றிருக்கிறது.

“கைக்குழந்தையைச் செல்லும் இடமெல்லாம் எடுத்துப்போவது நல்லதல்ல. இவர் மகப்பேறு விடுப்பு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்” என்று தொடர்ந்து விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

ஆனால், இதுவரை இந்த விமர்சனங்களைப் பல்லவி கண்டுகொண்டதே இல்லை.

கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி
கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி

பிரதமர், முதல்வர் நிகழ்ச்சி

நேற்று (அக்டோபர் 11) இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஐ.ஐ.டி. மெட்ராஸ்ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சிக்கும் பல்லவி தன்னுடைய கைக்குழந்தையுடன் தான் வந்திருந்தார்.

கார்த்தி சிதம்பரம் பதிவு

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

“வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கான குழந்தைகள் பராமரிப்பு மையம், மகப்பேறு விடுப்பு, மற்றும் தந்தையருக்கான விடுப்பு போன்ற குடும்பச் சாதகக் கொள்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

பொது நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து குழந்தைகளை அழைத்து வருவது நடைமுறைத் தேவையை விட அரசியல் விளம்பரத்திற்காகவும் கவனத்தை ஈர்ப்பதற்காகவுமே செய்யப்படுவது போல் தோன்றுகிறது.

விஜய் இது குறித்து அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்குவார் என்று நம்புகிறேன்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லவியின் இந்தச் செயலுக்கு முதல்முறையாக கூட்டணிக் கட்சித் தலைவரிடமிருந்தே எதிர்ப்பு வந்துள்ளது. இதை தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் விஜய் கவனிப்பாரா?

அரசு நிகழ்ச்சி மேடையில் நயினார் நாகேந்திரன்: "மோசமான முன்னுதாரணம்"- நிர்மல் குமார் காட்டம்

நேற்று சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியின் மேடையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அமர்ந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் Emergency நிலை: பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கட்சி ஆட்சியைக் கலைத்த ஷெபாஸ் அரசு!

நேற்று (அக்டோபர் 11) ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு.மேலும், அங்கே நடந்துகொண்டிருந்த பாகிஸ்தானின் முன்னாள் ப... மேலும் பார்க்க

'ரொம்ப விசுவாசமா இருக்காரே...' - அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி?

பிரதமர் மோடி பூந்தமல்லி மெட்ரோ திறப்பு விழா மற்றும் வேறு சில அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். பிரதமரை தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய்யும் அமைச்சர்களும் வரவேற்கையில் ஒரு ச... மேலும் பார்க்க

விறகுக்கு இரையாக இருந்த ஆல மரங்கள்; 200 கிமீ லாரிகளில் எடுத்து வந்து உயிர் கொடுத்த நல்லுள்ளங்கள்!

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்தியா முழுவதும் போடப்படும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக, லட்சக்கணக்கான பழமையான மரங்கள் நாள்தோறும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அவற்றில் 80% மரங்கள் நூறு ஆண்ட... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன... மேலும் பார்க்க