செய்திகள் :

விறகுக்கு இரையாக இருந்த ஆல மரங்கள்; 200 கிமீ லாரிகளில் எடுத்து வந்து உயிர் கொடுத்த நல்லுள்ளங்கள்!

post image

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்தியா முழுவதும் போடப்படும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக, லட்சக்கணக்கான பழமையான மரங்கள் நாள்தோறும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அவற்றில் 80% மரங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதுதான் வலிநிறைந்த துயரம்.

ஒரு வளர்ந்த மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாகக் குறைந்தபட்சம் பத்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றங்களும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்களைக்கூட யோசிக்காமல் வெட்டி வீழ்த்திவிடும் நெடுஞ்சாலைத்துறை, அதற்கு ஈடாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று யோசிப்பதில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் நீண்டநாள் குற்றச்சாட்டு.

மரங்கள்
மரங்கள்

அதேபோல எவ்வளவு பெரிய மரங்களானாலும் அவற்றை வேருடன் பிடுங்கி, வேறு ஒரு இடத்தில் நடுவதற்கான தொழில்நுட்பங்களும், வசதிகளும் வந்துவிட்ட நிலையில், மத்திய மாநில அரசுகள் அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.

ஆனால் நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசும் அரசுகள், இயற்கையின் வீழ்ச்சி குறித்துப் பேசுவதில்லை. இந்தச் சூழலில்தான் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட இருந்த ஏழு மரங்களை நவீன தொழில்நுட்பம் மற்றும் நண்பர்கள் உதவியுடன், மீட்டிருக்கிறார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த தரணி திருவேங்கடம்.

சென்னையில் தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை தரணி திருவேங்கடம் நடத்தி வருகிறார். தொழில் தொடர்பாக சென்னையில் இருந்து ராணிப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை, அடுத்தடுத்து வெட்டவிருந்த மரங்களை `மார்க்' செய்து வைத்திருந்தது. அதைப் பார்த்த தரணி திருவேங்கடம், அந்த மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் அவற்றை தானே வேருடன் எடுத்து வளர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அங்கிருந்த பணியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

அதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைச் சந்தித்த தரணி திருவேங்கடம், மரங்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை எடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தனர்.

மரங்கள்
மரங்கள்

அதையடுத்து மரங்களை வேருடன் பிடுங்கி நடுவது குறித்து வேளாண்துறை அதிகாரிகளின் உதவி மற்றும் ஆலோசனைகளைக் கேட்ட தரணி, நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் மூலம் மூன்று கிரேன்களை ஏற்பாடு செய்தார்.

அவற்றின் உதவியுடன் மூன்று ஆல மரங்கள், ஒரு அரச மரம் மற்றும் மூன்று ஈச்ச மரங்களை வேருடன் அகற்றி நீண்ட லாரிகளில் ஏற்றினார். ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் பயணித்த அந்த மரங்கள், தரணி திருவேங்கடத்தின் சொந்த கிராமமான வீரசோழகன் கிராமத்துக்குச் சென்றன.

அங்கு தனக்குச் சொந்தமான இடத்தில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் மர ஆர்வலர்கள் உதவியுடன் மரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார். தரணி திருவேங்கடம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

டெல்லி போராட்டம்: "மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன... மேலும் பார்க்க

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில்ஆட்சியைப் பிடித்... மேலும் பார்க்க

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!

இன்று (அக்டோபர் 11) சென்னை வந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி.விமான நிலையத்திற்கு வந்து மோடியை நேரில் சென்று வரவேற்றார் தமிழ்நாடு... மேலும் பார்க்க

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.ஹவுதியின் ... மேலும் பார்க்க

'தவெக கோஷம்... சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' - ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி

'மாணவர்களின் குரல்' என்ற பெயரில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தியிருந்தார். காங்கிரஸின் தேசியத் தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த சில... மேலும் பார்க்க