செய்திகள் :

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

post image

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹவுதியின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

''கடந்த சில நாள்களில் ரியாத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களையும், குறிப்பாக உயிர்ப்பலி, காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களை ஏற்படுத்திய அக்டோபர் 10 அன்றைய கொடூரமான தாக்குதலையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

அறிக்கை
அறிக்கை

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.

பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

சவூதி அரேபிய நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசாங்கத்துடனும் நாங்கள் உறுதியுடன் நிற்கிறோம்.

மேலும் இப்பகுதியில் விரைவில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பும் என நம்புகிறோம்".

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!

இன்று (அக்டோபர் 11) சென்னை வந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி.விமான நிலையத்திற்கு வந்து மோடியை நேரில் சென்று வரவேற்றார் தமிழ்நாடு... மேலும் பார்க்க

'தவெக கோஷம்... சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' - ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி

'மாணவர்களின் குரல்' என்ற பெயரில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தியிருந்தார். காங்கிரஸின் தேசியத் தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த சில... மேலும் பார்க்க

வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சத்தியஞான சபையின் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று, வள்ளலாரின் பின்தொடர்பாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன... மேலும் பார்க்க

சவுதி அரேபிய விமான நிலையத்தில் ஏவுகனை தாக்குதல்: 12 பேர் பலி, 300 பேர் காயம்; ட்ரம்ப் சொல்வது என்ன?

சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டில் உள்ள பிரிவினைவாத அமைப்பான ஹூதிகளுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் இருந்து மோதல் இருந்து வருகிறது. ஏமன் அரசாங்கத்தின் சார்பாக ஏமனின் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபி... மேலும் பார்க்க

SIR விவகாரம்: "உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சென்று அலுத்துவிட்டது" - கபில் சிபல் விமர்சனம்

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் நடக்கும் போராட்டம் - இந்த இரண்டும்தான் இந்தியாவின் இப்போதைய பரபரக் காட்சிகள்... மேலும் பார்க்க