செய்திகள் :

SIR விவகாரம்: "உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சென்று அலுத்துவிட்டது" - கபில் சிபல் விமர்சனம்

post image

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் நடக்கும் போராட்டம் - இந்த இரண்டும்தான் இந்தியாவின் இப்போதைய பரபரக் காட்சிகள்.

ஆனால், இந்த இரண்டு குறித்துமே உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல்.

நேற்று (அக்டோபர் 10) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கபில் சிபல், “நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறோம். ஆனால் எங்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்த அரசு விலக வேண்டும் என்றே நாட்டின் மக்கள் கருதுகிறார்கள்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்தச் சூழலில் அரசியலமைப்பைக் காப்பாற்றக்கூடிய ஒன்று இருக்கிறது என்றால், அது இந்திய உச்ச நீதிமன்றம் மட்டுமே.

ஆனால், தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று எனக்குச் சலித்துவிட்டது. இதை நான் எனது சொந்தக் கருத்தாகப் பேசுகிறேன்.

நம்பிக்கை இல்லை

அங்குச் செல்வதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

எனக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. எது நடக்க வேண்டுமோ, அது நடக்கும்.

வாக்காளர்களின் பெயர்கள் தவறாக நீக்கப்படுவதாகவும், தவறாகச் சேர்க்கப்படுவதாகவும் நாங்கள் பலமுறை உச்ச நீதிமன்றத்திடம் கூறினோம்.

தெரிந்திருக்க வேண்டும்

மாதக்கணக்கில் வாதிட்டோம். ஆதாரங்கள் பொதுமக்கள் முன் உள்ளன. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 93% பேர் தவறாக நீக்கப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் தற்போது கூறுகின்றன.

எனவே, இது உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ஆகவேதான் நான் என் சொந்தக் கருத்தாகச் சொல்கிறேன், எனக்கு நம்பிக்கை இல்லை" என்று பேசியுள்ளார்.

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.ஹவுதியின் ... மேலும் பார்க்க

'தவெக கோஷம்... சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' - ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி

'மாணவர்களின் குரல்' என்ற பெயரில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தியிருந்தார். காங்கிரஸின் தேசியத் தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த சில... மேலும் பார்க்க

வள்ளலார் சபை நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் - ஆட்சியர், எஸ்.பி-க்கு நீதிமன்றம் `கெடு’ விதித்த பின்னணி

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் சத்தியஞான சபையின் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று, வள்ளலாரின் பின்தொடர்பாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன... மேலும் பார்க்க

சவுதி அரேபிய விமான நிலையத்தில் ஏவுகனை தாக்குதல்: 12 பேர் பலி, 300 பேர் காயம்; ட்ரம்ப் சொல்வது என்ன?

சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டில் உள்ள பிரிவினைவாத அமைப்பான ஹூதிகளுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் இருந்து மோதல் இருந்து வருகிறது. ஏமன் அரசாங்கத்தின் சார்பாக ஏமனின் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபி... மேலும் பார்க்க

"உங்கள் கூலிப்படையினரை வேண்டுமானாலும் அழையுங்கள்" - அமித் ஷாவிற்கு 'தேதி' சொல்லும் ராகுல் காந்தி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.இதற்கு எதிர்ப்பு... மேலும் பார்க்க

"உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது" - ரஷ்யாவிடம் 'டீல்' போட்ட ட்ரம்ப் கருத்து

நேற்று முன்தினம் (அக்டோபர் 9) அமெரிக்க அதிபர் டரம்ப், ரஷ்யாவுடன் டீசல் சப்ளை ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார்.ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிய வேண்டும் என்று ரஷ்யா மீது பெரிய அளவிலான தடையை விதித்தது ... மேலும் பார்க்க