செய்திகள் :

`தாயார் குணமடைவதற்கு சிவனிடம் கொடுத்த வாக்குறுதி இது...' - தினமும் 50 கிலோமீட்டர் ஓடும் இளைஞர்!

post image

பிச்சைக்காரன் படத்தில் தனது தாயார் குணமடைய வேண்டும் என்பதற்காக படத்தின் ஹீரோ ஒரு மண்டலத்திற்கு யாசகம் செய்து பிழைப்பு நடத்துவார். அது போன்று அதேசமயம் சற்று வித்தியாசமாக பீகாரைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயார் உடல் நலம் தேறியதற்காக நேர்த்திக்கடனை செலுத்தி இருக்கிறார். பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞர், தனது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இந்தியா முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளார்.

அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த மோனு மெதுர்பாலா என்ற அந்த வாலிபர் தனது தாயார் நோயிலிருந்து குணமடைய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தார். மேலும் அவரது உடல்நிலை மேம்பட்டால் 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிப்பதாக சபதம் செய்தார்.

அவரது தாயார் குணமடைந்த பிறகு, மோனு இந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி ஜோதிர்லிங்கத்தை தரிசிப்பதற்கான தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் இதுவரை சுமார் 8,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து 12 ஜோதிர்லிங்கங்களில் ஐந்தை தரிசித்துள்ளார்.

அவர் தனது இலக்கை நோக்கித் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் ஓடிக்கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் @monu_betaurabala என்ற கணக்கு மூலம் மோனு தனது புனிதப் பயணம் குறித்த அறிவிப்புகளைப் பகிர்ந்து வருகிறார். அவர் கடவுளிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும், தனது உடல் வலிமையை மேம்படுத்துவதற்காகவும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச் 15ம் தேதி முதல், மோனு இதுவரை சுமார் 8,000 கிலோமீட்டர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

பல மாதங்கள் நீண்ட தூரம் ஓடுவதற்கு வழக்கமான ஓய்வு, திட்டமிடல் மற்றும் ஏற்பாடுகள் தேவை. சாலை நிலைமைகள், வானிலை மற்றும் நிலப்பரப்பு மாறுபடும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அவர் தொடர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார். மோனுவின் பயணம், ஷ்ரவன் குமார் பயணத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. ஷ்ரவன் குமார் தனது தாயின் உடல்நலம் தொடர்பான வாக்குறுதியின் காரணமாக கடினமான பயணத்தை மேற்கொண்டார். மோனுவின் முழு வழி, மீதமுள்ள அட்டவணை மற்றும் சரியான ஓடும் தூரம் ஆகியவை குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால் அவரது ஓட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன.

`என் உலகத்தையே இழந்துவிட்டேன்' - 5 வயது மகளை கொன்ற மனைவி; இறுதிச்சடங்கிற்கு நிதி உதவி கோரும் தந்தை!

நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் 5 வயது சிறுமி ஃபபியானா கபெல்லோ உயிரிழந்த வழக்கில், அவரது தாய் ஃபிரான்சிஸ் கபெல்லோ (32) மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'நானே என் மக... மேலும் பார்க்க

Tiger Shroff attack: டெல்லி டு மும்பை... டைகர் ஷெராப்பைச் சுட துப்பாக்கி கொடுத்த உ.பி பெண்கள்!

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக டெல்லி மற்றும் ஹரியானாவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ராதா மற்றும் பபிதா ஆகிய... மேலும் பார்க்க

டைகர் ஷெராப் மட்டுமல்ல... அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், ஆமீர் கானுக்கும் குறிவைத்த பிஷ்னோய் கேங்!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு: ஆயுதங்களை சப்ளை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

மும்பையில் கடந்த சில நாட்களுக்கு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவர் கால்பந்து கிளப் ஒன்றுக்கு சென்றுவிட்டு வெளியில் வந்து காரில் இருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நட... மேலும் பார்க்க

15 ஆண்டாக போராடிய கிரிக்கெட் வீரர்: தே.ஜ.கூட்டணிக்கு மாறியவுடன் யூசுப் பதானுக்கு கிடைத்த நிலம்

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான் அரசியலில் அணி மாறிய சில மாதங்களுக்குள், அவருக்கு குஜராத் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பரிசு கிடைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் யூசுப் பதான் வ... மேலும் பார்க்க