காதலனை மாடியிலிருந்து தள்ளி கொன்றாரா சோசியல் மீடியா பிரபலம்? மும்பை மாபியாவில் த...
Asian para games: பாலியல் புகார்; ஜப்பானிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட இந்திய வீரர்; வாழ்நாள் தடையா?
சர்வதேசப் போட்டிகளில் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கு வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஒழுக்கமும் முக்கியம். அப்படியிருக்க, ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இந்திய பாரா நீச்சல் வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக், பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வாழ்நாள் தடை விதிக்கவும் இந்திய பாராலிம்பிக் கமிட்டி (PCI) பரிசீலித்து வருகிறது.
என்ன நடந்தது?
இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஜப்பானின் நகோயா நகர ஹோட்டலில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு பணியாற்றிய நேபாள வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், ஷம்ஸ் ஆலம் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தன்னைத் தவறாகத் தொட முயன்றதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து, நடந்த சம்பவம் குறித்து உடனடியாகத் தனது மேலாளரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜப்பான் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். இந்திய அணியின் அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஷம்ஸ் ஆலம் போட்டியில் பங்கேற்காமலேயே ஜப்பானிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மேலும் ஹோட்டல் நிர்வாகத்திடமும் இந்திய அணியின் சார்பில் மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாழ்நாள் தடை விதிக்கப்படுமா ?
பாலியல் முறைகேடு உள்ளிட்ட ஒழுக்கமற்ற நடத்தைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே கமிட்டியின் நிலைப்பாடு. போட்டிக்கு முன்பாகவே வீரர்கள் மற்றும் அணியின் உறுப்பினர்களுக்கு நடத்தை விதிகள், பொறுப்புகள், ஒழுக்கம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா எத்தகைய நடவடிக்கை எடுக்கிறது என்பதைப் பொறுத்து, ஹோட்டல் நிர்வாகமும் போட்டி ஏற்பாட்டுக் குழுவும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க உள்ளன.
இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி (PCI), ஷம்ஸ் ஆலம் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. அவரிடம் முறையான விசாரணை நடத்தி, வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















