செய்திகள் :

NZ v IND : "'பந்தை பாரு, ஹிட் இட்.!' - இதுதான் எங்கள் திட்டம்!" - ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்

post image

இந்திய அணி தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், தனது சிறப்பான ஆட்டத்திற்காக 'ஆட்டநாயகன்' விருதை வென்றார்.

போட்டிக்குப் பிறகு தனது ஆட்டம் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "வெற்றியின் பக்கம் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அணி வெற்றி பெறும்போது, நமது பங்களிப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஒரு நல்ல உணர்வைத் தரும். இது முற்றிலும் ஒரு அணி விளையாட்டு. தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

'பந்தை பாருங்கள், அடி' - இதுதான் எங்கள் திட்டம்!

தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து பவர்பிளே ஓவர்களில் அதிரடி காட்டினார். முதல் ஆறு ஓவர்களில் இந்த ஜோடி 90 ரன்களுக்கு மேல் குவித்து, போட்டியின் போக்கையே மாற்றியது. தங்களது பார்ட்னர்ஷிப் ரகசியம் குறித்து சஞ்சு பேசுகையில், "நாங்கள் களத்தில் நிறைய பேசிக்கொள்வோம், ஆனால் அதில் பெரிய திட்டமெல்லாம் எதுவும் இருக்காது. 'பந்தை பார், பலமாக அடி' என்பதுதான் எங்கள் அணுகுமுறை. அது எங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. அபிஷேக்குடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது," என்று புன்னகையுடன் குறிப்பிட்டார்.

கீப்பிங்கில் ஒரு கணிப்பு, பேட்டிங்கில் ஒரு ஆட்டம்!

ஆடுகளத்தின் தன்மை குறித்து சஞ்சு, "விக்கெட் கீப்பிங் செய்யும்போது உங்கள் பேட்டிங் பற்றி நீங்கள் நிச்சயம் சிந்திப்பீர்கள். அதன்படி, கீப்பிங் செய்தபோது ஆடுகளத்தை ஒருவிதமாக கணித்து, எப்படி விளையாட வேண்டும் என ஒரு திட்டம் வைத்திருந்தேன். ஆனால் நான் பேட்டிங் செய்ய வந்தபோது, ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. முதல் பாதியில், பந்து லெந்த் ஏரியாவில் பிட்ச் ஆகி சற்று நின்று வந்தது. ஆனால் இரண்டாவது பாதியில், மைதானத்தில் அதிக பனிப்பொழிவு இருந்ததால் பந்து பேட்டிற்கு மிக அருமையாக வந்தது. பந்து நன்றாக ஸ்விங் ஆனாலும், அது பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. அதனால் நான் பேட்டிங்கை மிகவும் ரசித்து விளையாடினேன்," என்று சஞ்சு கூறினார்.

பவர்பிளேவில் கிடைத்த இந்த அதிரடியான தொடக்கத்தால், ஆட்டத்தை விரைவாகவே முடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்ததாகவும், அதனால் தொடர்ந்து அதிரடியாக விளையாட முடிவு செய்ததாகவும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார். இந்த வெற்றி, தொடரின் அடுத்த போட்டிகளுக்கு இந்திய அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

NZ v IND : "மெகா சேஸிங்கை எளிதாக்கியது அதுதான்.!" - வெற்றி ரகசியத்தை உடைத்த ஸ்ரேயாஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆடுகளத்தின் தன்மை மாறியதும், பனிப்பொழ... மேலும் பார்க்க

NZ v IND: `இமாலய இலக்கு' - மிரட்டிய சஞ்சு; ஃபினிஷிங்கில் இளம் வீரர்கள் மாஸ்! இந்தியா த்ரில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில், 226 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி, இளம் வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்,... மேலும் பார்க்க

பிசிசிஐ தேர்வுக் குழுவில் அதிரடி மாற்றம்: புதிய தலைவர் பிரக்யான் ஓஜா!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வீரர்களைத் தேர்வு செய்யும் பிசிசிஐ (BCCI) தேர்வுக் குழுவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா குழுவின் தலைவராக ... மேலும் பார்க்க

``விவாகத்துக்குப் பின் மதுவுக்கு அடிமையானேன்" - கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளருமான யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்... மேலும் பார்க்க

சூர்யகுமார் சாதனைக்கு எண்ட் கார்டு! பவர் பிளேயில் தனி சாம்ராஜ்யம்… சாதனைகள் படைத்த அபிஷேக் சர்மா!

டி20 கிரிக்கெட்டில் சில வீரர்கள் களமிறங்கினாலே எதிரணியின் திட்டங்கள் மாறிவிடும். அந்த வகையில், பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது என்று யோசிப்பதற்குள், அதை எல்லைக்கோட்டுக்கு அனுப்பிவிடுவார்... மேலும் பார்க்க

NZ vs IND: 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!' - 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்

ஒரு காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் தவிர்க்க முடியாத பெயராக இருந்தவர் புவனேஷ்வர் குமார். புதிய பந்தை கையில் எடுத்தாலே ஸ்விங்... டெத் ஓவர்களில் பந்தை கச்சிதமாகக் கட்டுப்படுத்தும் திறன் எனத் தனக்... மேலும் பார்க்க