செய்திகள் :

Ro Khanna: அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியின் குரல்... மீண்டும் வெற்றி பெற்ற ரோ கண்ணா!

post image

சிலிக்கான் வேலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கண்ணா (Ro Khanna), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் துறை, வேலைவாய்ப்பு, வெளியுறவுக் கொள்கை எனப் பல்வேறு விவகாரங்களில் தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

மீண்டும் வெற்றி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் 17-வது நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோ கண்ணா, நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிதேஷ் டண்டனைத் (Ritesh Tandon) தோற்கடித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது அடுத்த பதவிக்காலத்தை உறுதி செய்துள்ளார்.

இந்தியக் குடும்பப் பின்னணியும் கல்வியும்

1976-ம் ஆண்டு பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியாவில் பிறந்தவர் ரோ கண்ணா. இவரது பெற்றோர் பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தந்தை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) பொறியியல் படித்தவர்; தாய் சிறப்புக் கல்விப் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற ரோ கண்ணா, பின்னர் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

ரோ கண்ணா

ஒபாமா ஆட்சியில் பணி முதல் மக்கள் பிரதிநிதி வரை...

அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஆர்வம் கொண்ட இவர், பராக் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்க வர்த்தகத் துறையின் துணைச் செயலராகப் பணியாற்றினார். அந்தப் பொறுப்பில் சர்வதேச வர்த்தக உறவுகள், அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தினார்.

பின்னர் கல்வித்துறையிலும் பணியாற்றினார். 2004 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர், சளையாது முயற்சி செய்து 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரோ கண்ணா

தொழில்நுட்பமும் வெளியுறவுக் கொள்கையும்

சிலிக்கான் வேலி அமெரிக்காவின் முக்கியத் தொழில்நுட்ப மையமாக இருப்பதால், அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தித் துறை வளர்ச்சி ஆகியவை அவரது அரசியல் பணிகளில் முக்கிய இடம் பெறுகின்றன. அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'எண்ட்லெஸ் ஃபெரன்ட்டியர்' (Endless Frontier Act) சட்ட முன்மொழிவை இவர் அறிமுகப்படுத்தினார். இந்தச் சட்ட முன்மொழிவே பின்னர் அமெரிக்காவின் புகழ்பெற்ற 'சிப்ஸ் அண்ட் சயின்ஸ்' (CHIPS and Science Act) சட்டம் உருவாவதற்கான அடிப்படைகளில் ஒன்றாக அமைந்தது.

வெளியுறவுக் கொள்கையிலும் ராணுவ நடவடிக்கைகளைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இந்திய வம்சாவளிப் பின்னணியிலிருந்து வந்து அமெரிக்க அரசியலின் உயர் பொறுப்பில் இருக்கும் ரோ கண்ணா, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த முக்கிய விவாதங்களில் முதன்மையான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

"பாஜகவின் ஆதரவோடு அதிமுகவும், திமுகவும் ஆட்சியமைக்க முயல்கிறது" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில்அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தி... மேலும் பார்க்க

மணப்பாறை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி!

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபற்றி நம்மிடம் பேசிய, பா.ஜ.க மணப்பாறை ... மேலும் பார்க்க

`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ - மு.க.ஸ்டாலின்

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார். பின்னர் நிலாம்பூர் பகுதியில் புதிய தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில்... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய தலைமைச் செயலகம் அமை... மேலும் பார்க்க

ஆசிரியராகத் தொடங்கி அமெரிக்க நாடாளுமன்றம் வரை... சாதித்த இந்திய வம்சாவளி - யார் இந்த பியா தண்டியா?

இந்திய வம்சாவளிப் பெற்றோருக்கு புளோரிடாவில் பிறந்த பியா தண்டியா (Pia Dandiya), கல்வித்துறையில் தனது பணியைத் தொடங்கி, அமெரிக்காவின் முக்கிய நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அனுபவம் பெற்றவர். தற்... மேலும் பார்க்க

கேரளம்: "அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அவசரம் காட்டுவது ஏன்?"- பினராயி விஜயன் கேள்வி

கேரளத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பாகமாக கேரள மின்சார வாரியத் தலைவராக இருந்த ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, புதிய தலைவராக பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளத்... மேலும் பார்க்க