செய்திகள் :

"20 சதவீத கமிஷன் பெற ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தவெக அரசு தொடங்கியுள்ளதா?" - டிடிவி காட்டம்

post image

ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன் பெறுவதற்காக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிவகங்கையில் VB-G RAM G திட்டத்தின் (125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்) கீழ் ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை விதிமுறைகளை மீறி தவெக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்க முயற்சிப்பதாகவும், இவ்வொப்பந்தங்களை வழங்குவதற்காக ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாகவும் சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி அவர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி சாதாரண கட்சி நிர்வாகிகள் வரை கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, கமிஷன் கேட்பது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது எனப் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மக்கள் நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதோடு, பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போயுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வாரா முதல்வர்?

"உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், இது உங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லி லஞ்சம் கொடுக்காதீர்கள்" என மக்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழும் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதன் விளைவாக, இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினரே 20 சதவீதம் வரை கமிஷன் என்ற பெயரில் 'சர்வீஸ் சார்ஜ்' கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஊழலை ஒழிப்போம், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம், அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனத் தேர்தல் நேரத்தில் வீராவேசமாக பஞ்ச் டயலாக்குகளைப் பேசிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் வரை பலர் மீது தொடர்ந்து எழுந்துவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வாரா? அல்லது எப்போதும் போல, மக்கள் எக்கேடு கெட்டாலும் தனக்கென்ன என்ற மனப்பான்மையுடன் மௌனமாகக் கடந்து செல்வாரா?

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, தவெக ஆட்சி அமைந்தது முதல் போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அரசு பதவிகளைப் பெற 5 கோடி ரூபாய் வரை லஞ்சப் பேரம் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொடங்கி தவெக நிர்வாகிகள் மீது எழுந்த புகார்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகக் கடந்து சென்றதைப் போல, சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரையும் அலட்சியப்படுத்திவிடாமல், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

கேரளம்: "அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அவசரம் காட்டுவது ஏன்?"- பினராயி விஜயன் கேள்வி

கேரளத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பாகமாக கேரள மின்சார வாரியத் தலைவராக இருந்த ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, புதிய தலைவராக பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளத்... மேலும் பார்க்க

"கேரளாவுக்கு ரூ.8க்கு மின்சாரம் கிடைக்குமென்றால், தவெக அரசுக்கு ஏன் சாத்தியமில்லை?"- ஸ்டாலின் கேள்வி

"கேரளாவுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?" என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பத... மேலும் பார்க்க

US Mid Term Election: செனட் சபையை இழந்தது ட்ரம்ப் கட்சி - தட்டித் தூக்கிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் நாடாளுமன்றம் காங்கிரஸ். இதில் மேல்சபை, கீழ்சபை என இரண்டு அவைகள் உள்ளன. ட்ரம்ப் கட்சி பின்னடைவுமேல்சபையான செனட்டில் இப்போது... மேலும் பார்க்க

'துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம் - ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்!'

'நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில்- என்னையே ‘மகா பிற்போக்குவாதி’, என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அத... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: "கருத்துக்கேட்புக் கூட்டத்தை மறைமுகமாக நடத்துவதா?"- சீமான் கேள்வி

"கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப... மேலும் பார்க்க

"18 நாள்கள் அவைக்கு வராத அமித்ஷா; எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்!" - சசிகாந்த் செந்தில் காட்டம்

‘வெளிநாடு உதவி, ஆதரவு யாருக்கு இருக்கிறது’ என்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய மோடிய... மேலும் பார்க்க