செய்திகள் :

"ராகுல் தயார்; நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மோடி தயாரா?" - மாணிக்கம் தாகூர்

post image

‘வெளிநாட்டிலிருந்து யார் உதவி பெறுகிறார்கள்?’ என்று மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி vs மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

வெளிநாட்டு உதவி குறித்து விவாதிக்க மோடிக்கு நேரடியாகச் சவால் விடுத்திருந்தார் ராகுல் காந்தி. நேரம் மற்றும் இடத்தையும் கூறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

நிர்மலா சீதாராமன் சாடல்

ராகுல் காந்திக்குப் பதிலடி தருவதுபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘விவாதத்திற்கு நாடாளுமன்றம் இருக்கிறது. ஆனால், அங்கே எதிர்க்கட்சிகள் விவாதிக்காமல், அவையை இழுத்தடிக்கிறார்கள்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மேலும், ‘காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் நீங்கள் சமீபத்தில் மாதிரி நாடாளுமன்றம் நடத்தியிருந்தீர்கள்’ என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தி இல்லத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டத்தைச் சாடியிருந்தார்.

மாணிக்கம் தாகூர் பதில்

நிர்மலா சீதாராமனின் இந்தப் பதிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், “நிர்மலா ஜி, உண்மைகளை முதலில் தெரிந்துகொள்வோம்.

முதலாவதாக, அது ஒன்றும் மாதிரி நாடாளுமன்றம் அல்ல. அது ஞானேஷ் குமார் மீது, அரசியலமைப்பு சார்ந்த கண்ணியத்துடனும் தீவிரத் தன்மையுடனும் நடத்தப்பட்ட ஒரு பகிரங்கப் பதவிநீக்க விசாரணை நடவடிக்கை.

அதில் நாடாளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல் எதுவுமில்லை.

ராகுல் தயார்!

கேலிக்கூத்து என்பதைப் பற்றி நீங்கள் பேச விரும்பினால், அக்டோபர் 30-ம் தேதி தால்கட்டோரா ஸ்டேடியத்தில் அமித் ஷா ஜியின் ஆதரவோடு அரங்கேற்றப்பட்ட அந்த நாடகத்தைப் பாருங்கள். அதுதான் உண்மையான கேலிக்கூத்து!

எஸ்.ஐ.ஆர் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான உண்மைகள் மிகவும் தீவிரமானவை, வலுவான ஆதாரங்கள் கொண்டவை மற்றும் உடனடியாகப் பதிலளிக்க வேண்டியவை என்பதற்காகவே ராகுல் ஜி விவாதத்தைக் கோருகிறார்.

மக்களவையில் இந்த விவாதத்தைச் சந்திக்க மோடி ஜியையும் அமித் ஷா ஜியையும் சம்மதிக்க வைத்தால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் ஜி முற்றிலும் தயாராகவே இருக்கிறார்.

மோடிஜி தயாரா?

இங்கு உண்மையான கேள்வி ராகுல் ஜி தயாராக இருக்கிறாரா என்பதில்லை. நாடாளுமன்றத்தில் எழும் கேள்விகளை எதிர்கொள்ள மோடி ஜி தயாராக இருக்கிறாரா என்பதுதான்!

பொறுப்புக்கூறலைக் கோருவது ஒன்றும் குற்றமல்ல. ஆய்வுகளையும் கேள்விகளையும் தட்டிக் கழிப்பது நல்ல தலைமைத்துவமும் அல்ல.

நாங்கள் பிரதமரிடம் அதையேதான் மீண்டும் சொல்கிறோம்...

பயப்படாதீர்கள், மோடி ஜி.

நாடாளுமன்றத்திற்கு வாருங்கள்.

விவாதத்தை எதிர்கொள்ளுங்கள்.

கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

US Mid Term Election: செனட் சபையை இழந்தது ட்ரம்ப் கட்சி - தட்டித் தூக்கிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் நாடாளுமன்றம் காங்கிரஸ். இதில் மேல்சபை, கீழ்சபை என இரண்டு அவைகள் உள்ளன. ட்ரம்ப் கட்சி பின்னடைவுமேல்சபையான செனட்டில் இப்போது... மேலும் பார்க்க

'துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம் - ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்!'

'நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில்- என்னையே ‘மகா பிற்போக்குவாதி’, என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அத... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: "கருத்துக்கேட்புக் கூட்டத்தை மறைமுகமாக நடத்துவதா?"- சீமான் கேள்வி

"கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப... மேலும் பார்க்க

"18 நாள்கள் அவைக்கு வராத அமித்ஷா; எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்!" - சசிகாந்த் செந்தில் காட்டம்

‘வெளிநாடு உதவி, ஆதரவு யாருக்கு இருக்கிறது’ என்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய மோடிய... மேலும் பார்க்க

மோடியை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் ராகுல்; "நாடாளுமன்றமே சரியான இடம்" - நிர்மலா சீதாராமன் பதில்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, ‘எதிர்க்கட்சிகளுக்கு வெளிநாடுகள் உதவி செய்கின்றன’ என்கிற குற்றம்சாட்டியிருந்தார். நேற்ற... மேலும் பார்க்க

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தல்: ட்ரம்பிற்கு ஆரம்பத்திலேயே பின்னடைவு; மக்கள் அதிருப்தியின் எதிரொலியா?

அமெரிக்காவில் நேற்று (நவம்பர் 3) மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இது அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் ஆகும். எத்தனை இடங்கள் பெரும்பான்மை?இதில் கீழ்சபை (US House of Representatives)... மேலும் பார்க்க