செய்திகள் :

1.5 ஏக்கர் நிலத்திற்காக நடந்த கொடூரம்; மருமகளை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்; தெலங்கானாவில் பகீர்

post image

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் உள்ள ஓபுலயபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா(28), இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்தல் தண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பல்ராமுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஓராண்டுக்கு முன், கிராமப் பெரியவர்கள் தலையிட்டு, பல்ராமின் 1.5 ஏக்கர் நிலத்தை, சுனிதா பெயரில் பதிவு செய்து, பிரச்னையைத் தீர்த்து வைத்தனர்.

இந்த முடிவு பல்ராமின் மூத்த சகோதரர்களான பாண்டு நாயக் மற்றும் மான்யா நாயக் ஆகியோரை கோபப்படுத்தியது. நிலைமை மோசமானதால் சுனிதா தனது குழந்தைகளோடு தனது பெற்றோரின் கிராமத்தில் சென்று வசித்து வந்தார். ஆனால் சுனிதாவின் பெற்றோர் சிந்தல் தண்டாவிற்குச் சென்று சொந்தமாக வீடு கட்டி அங்கேயே வாழும்படி கேட்டுக்கொண்டனர்.

சுனிதா
சுனிதா

அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது இரண்டு மகள்களுடன் சிந்தல் தண்டாவிற்கு வந்து சுனிதா வசிக்க ஆரம்பித்தார்.

நேற்று சுனிதா தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்நேரம் அவரது மாமனார் மாணிக்ய நாயக், மைத்துனர்கள் மான்ய நாயக் மற்றும் பாண்டு நாயக் மற்றும் பாண்டுவின் மனைவி பார்வதி ஆகியோர் அவரை வழிமறித்தனர். அவர்கள் சுனிதாவைத் தங்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்றனர்,

அங்கு அவர்கள் அவரை கத்தியால் தாக்கினர். அவரை கழுத்தை அறுத்து தலையைத் துண்டித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சுனிதாவின் தந்தை விரைந்து வந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் சுனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் நாகராஜு கூறுகையில், "சுனிதாவின் தந்தை வல்யா நாயக் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்துள்ளோம். சுனிதாவின் மாமனார் மாணிக்ய நாயக், மைத்துனர்கள் மான்ய நாயக், பாண்டு நாயக், பாண்டுவின் மனைவி பார்வதி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

நெல்லை: குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி கொலை; நண்பர்களே தீர்த்துக் கட்டினார்களா என போலீஸ் விசாரணை

கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சாலமன் சாம் பிரபாகரை பாளையங்கோட்டை போலீஸார் ரௌடி பட்டியலில் வைத்திருந்தனர். அவருக்கு நிறைய எதிரிகள் இருந்துள்ளனர்.​நெல்லை, பா... மேலும் பார்க்க

Ooty: பட்டாவில் பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்; VAO கைது; சிக்கியது எப்படி?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட எடக்காடு, நடுஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். இவரின் தந்தை பெயரில் உள்ள 3 ½ சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கியிருக்கிறார். பட்டா பெயர் மா... மேலும் பார்க்க

இலங்கைக்குக் கடத்த இருந்த 198 கிலோ கஞ்சா பிசின் பறிமுதல்; சிக்கிய நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை

பாசிப்பட்டினம் பாசியம்மன் கோவில் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்.பி.பட்டினம் காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான தன... மேலும் பார்க்க

கேரளம்: இன்ஸ்டாவில் பெண் குரலில் பேசி வரவழைத்து மாணவன் கொலை; காதல் விவகாரமா எனப் போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பாங்கப்பாறை சங்கீத நகர் நேதாஜி லேன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மது. ஆட்டோ ஓட்டுநரான இவரது மகன் அபிராம் (17). இவரது தாய் தர்மஜா மற்றும் சகோதரி ஆகிய... மேலும் பார்க்க

கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி; பவானியில் கைது; பின்னணி என்ன?

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் அன்னூர... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.36 கோடி பணம், தங்கம் கொள்ளை; 17 கிமீ விரட்டிச்சென்று கொள்ளையர்களைப் பிடித்த மக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் அருகில் உள்ள போகர் என்ற கிராமத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குள் மாலை 2.45 மணிக்கு ஹெல்மெட் அணிந்த நான்கு கொள்ளையர்கள் திடீரென நுழைந்தனர். அவர்கள் நுழைந்த நேரத... மேலும் பார்க்க