செய்திகள் :

கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதி; பவானியில் கைது; பின்னணி என்ன?

post image

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழிப்பறி வழக்கு தொடர்பாக ராகவன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, கடந்த 31ம் தேதியன்று சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்து வந்தனர்.

அப்போது கோவை மத்திய சிறை வளாகத்தில் பாதுகாப்பிற்காக வந்த காவலர்களைத் தள்ளிவிட்டு விட்டு ராகவன் தப்பியோடினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பந்தயசாலை காவல் துறையினர் தேடி வந்தனர். இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் வாகனச் சோதனைகள்  உதவியுடன் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ராகவனை தேடி வந்தனர்.

இதனிடையே அன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல் முத்தலிப், தலைமை காவலர் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் உட்பட 4 பேர் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 3 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் பவானிசாகர் பகுதியில் பதுங்கியிருந்த ராகவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் ரூ.36 கோடி பணம், தங்கம் கொள்ளை; 17 கிமீ விரட்டிச்சென்று கொள்ளையர்களைப் பிடித்த மக்கள்

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் அருகில் உள்ள போகர் என்ற கிராமத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குள் மாலை 2.45 மணிக்கு ஹெல்மெட் அணிந்த நான்கு கொள்ளையர்கள் திடீரென நுழைந்தனர். அவர்கள் நுழைந்த நேரத... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: எத்தனை பேர் கைது? அடையாள அணிவகுப்பு, LoC நோட்டீஸ் - காவல்துறையின் முழு விளக்கம்

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம் வீரமணி உள்ளிட்டவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. யார் யார் கைது? "சென்னை பெருநக... மேலும் பார்க்க

ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

நேற்று முன்தினம் (அக்டோபர் 31) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.ஆசிரியர் பாடம் எடுத்த... மேலும் பார்க்க

IVF: `சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டையை பிரித்தெடுத்த கும்பல்' - 8 பேர் கைது; 43 பெண்கள் மீட்பு!

ஹைதராபாத்தின் பிரகாஷ் நகர், எர்ரகட்டா, கோபாலபுரம் ஆகிய இடங்களில் மல்காஜ்கிரி கமிஷனரேட்டின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOT) மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தினர். அப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்தவரிடம் 900 மதுபாட்டில்கள் பறிமுதல்!

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், லெவிஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவரது வீட்டில் 1,000 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில்... மேலும் பார்க்க