சென்னையில் கனமழை; காசிமேட்டில் பத்திரப்படுத்தப்பட்ட படகுகள்; உஷார் நிலையில் மீனவ...
தீவிர புயலாக மாறிய முரசு; தமிழகத்திற்குப் பாதிப்பு உண்டா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது.
இந்நிலையில் செய்தியாளராக்களைச் சந்தித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை, "'முரசு புயல்' இன்று மதியம் 2 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவையோட்டிய பகுதிகளில் கரையைக் கடக்கும்.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். கடந்த காலத்தில் அர்னாப் புயல் கரையைக் கடந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளைப் போல, முரசு புயலால் பாதிப்பு இருக்காது.
நாளை காலை வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

நவம்பர் 7-ம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb


















