செய்திகள் :

`நொய்யல் ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்பு கலப்பதும்‌கூட காரணம்!' - சுற்றுச்சூழல் அமைச்சர் அடடே விளக்கம்

post image

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி வழியும் பிரச்னைக்கு, பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர்‌ ராஜீவ் புதிய விளக்கம் அளித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக‌ திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் ஏற்படும் மாசு காரணமாகவே நொய்யலில் நுரை பொங்கி எழுவதாக சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

அமைச்சர் ராஜீவ்

இந்த நிலையில் திருப்பூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட‌ அமைச்சர் ராஜீவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மழைக்காலங்களில் மட்டும் ஆற்றில் தண்ணீர் அதிகமாக போகும்போது அதிகளவில் நுரை பொங்குகிறது. மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு தண்ணீர் ஆற்றில் கலக்கும் போதும் நுரை ஏற்படுகிறது.

அதே வேளையில், மழையைப் பயன்படுத்திக் கொண்டு சாயப் பட்டறைகள் மற்றும் டெக்ஸ்டைல் ஆலைகளில் இருந்து ரசாயனக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சியில் இரவு பகல் பாராமல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும்" என்றார்.

Arnab: 3 மணிநேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்; வானிலை மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் அர்னாப் புயல் நிலைகொண்டுள்ளது.இந்திய வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி,“ஆந்திரக் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண... மேலும் பார்க்க

‘மிகக் கடும் புயலாக’ Arnab புயல்: சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம்... துறைமுகங்களுக்கு அலர்ட்!

அர்னாப் புயல் குறித்து இந்திய வானிலை மையம் கொடுத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்...“மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ கடும் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் ... மேலும் பார்க்க

Rain Alert: நாளை 'மிகக் கடும் புயலாக' மாறும் Arnab; தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? இன்று ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் தற்போது ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளது.அர்னாப் புயல்இது குறித்த இந்திய வானிலை மையத்தின் அப்டேட்...“மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்ற... மேலும் பார்க்க

Burliyar landslide: தடயமே தெரியாமல் அடித்துச் செல்லப்பட்ட வீடு; அதிர்ஷ்டவசமாக தப்பிய தம்பதி | Photos

அடித்துச் செல்லப்பட்ட வீடு அடித்துச் செல்லப்பட்ட வீடு அடித்துச் செல்லப்பட்ட வீடு அடித்துச் செல்லப்பட்ட வீடு அடித்துச் செல்லப்பட்ட வீடு அடித்துச் செல்லப்பட்ட வீடு அடித்துச் செல்லப்பட்ட வீடு அடித்துச் ச... மேலும் பார்க்க

Rain Alert: தமிழ்நாடு முழுவதும் இன்று மழை! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? எங்கெங்கே பள்ளி விடுமுறை?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின்படி,இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதப... மேலும் பார்க்க

சென்னையில் வானிலை ரேடார் செயல்படவில்லை? வானிலையைக் கணிப்பதில் சிக்கல்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.சென்னை வானிலை மையத்திலிருந்துதான் தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் வானிலை அப்டேட் செல்கிறது.தமிழ்நாடு முழுவதும் வருகிற 29-ம்... மேலும் பார்க்க