செய்திகள் :

JIO: தாத்தா திருபாய் பற்றிய பேசிய அனந்த் அம்பானி; கண்கலங்கிய முகேஷ் அம்பானி; வீடியோ வைரல்

post image

பங்குசந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் இன்று காலை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் அவரின் மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி இதனைத் தொடங்கி வைத்திருக்கின்றனர்.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனம் முதல் முறையாக பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, "சோர்வாடில் ஒரு சிறிய வீட்டில்தான் இந்தக் கனவு உருவானது. ஏடனில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இளம் வயதில் வேலை செய்த திருபாய் அம்பானி (அனந்த் அம்பானியின் தாத்தா) அவர்களுக்கு பணமோ அல்லது பெரிய தொடர்புகளோ எதுவும் இல்லை.

 அனந்த் அம்பானி
அனந்த் அம்பானி

இருப்பினும், அவரது பயணம் உண்மையான லட்சியத்தை நமக்கு உணர்த்துகிறது. இந்தியராலும் தன் வறுமை மற்றும் சூழ்நிலைகளைக் கடந்து, ஓர் அசாதாரணமான மாபெரும் கனவைக் காண முடியும் என்பதை அவர் உலகிற்கு நிருபித்துக் காட்டினார்.

அடுத்து, இந்தியாவைப் பற்றிய எனது தந்தையின் கனவைப் பற்றிப் பேச விரும்புகிறேன். உலக நாடுகளுக்கு மத்தியில் நமது இந்தியா எந்தவொரு துறையிலும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் முகேஷ் அம்பானி அவர்கள் உறுதியாக இருந்தார். ஜாம்நகரின் தரிசு நிலம், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக உருவெடுத்தது. இது, இந்தியர்களின் உழைப்பும் முயற்சியும் உலக அரங்கின் கவனத்தையே ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பதை உலகுக்கு உணர்த்தியது.

'ஜியோ' நிறுவனத்திற்கான விதையை இஷா அம்பானி விதைத்தார்; ஆகாஷ் அம்பானி அந்த யோசனையை ஏற்று அதைத் தனது சொந்தக் கனவாக மாற்றினார். ஜியோ என்ற பெயர் அன்றாட இந்திய உரையாடல்களில் கேட்கும் ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தைகளுடன் தொடர்புடையதாக மாறியிருக்கிறது.

பள்ளிகள் மூடப்பட்டபோது, டிஜிட்டல் அணுகல் மூலம் கல்வி தொடர்ந்தது. வீட்டில் இல்லாமல் தொலைவில் இருக்கும் ஒரு மகனுக்கு, வீடியோ கால் மூலம் காய்கறிகளைப் பார்த்து சமையல் வழிகாட்டினார் ஒரு தாய். வீட்டிலிருந்தபடியே தெய்வீக தரிசனம் பெற முடிந்தது.

ஜியோ
ஜியோ

ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த பெண் தனது போன் மூலம் மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து ஒரு ராணுவ வீரர் தனது குடும்பத்தை அழைத்து, தனது நலனைப் பற்றி தனது தாய்க்கும், மகளுக்கும் உறுதியளித்தார்.

மேலும் மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ராஜஸ்தானின் பாலியில் உள்ள தீவிர நோயாளிக்கு உதவினார். இவர்கள் அனைவரையும் இணைத்தது ஜியோதான்" என அனந்த் அம்பானி பேசியதைக் கேட்டு முகேஷ் அம்பானி கண்கலங்கி இருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

பத்திரிக்கையாளர்களை புகைப்படம் எடுத்த விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம்!

விஐடி துணைத் தலைவரும் வேலூர் சர்வதேசப் பள்ளி (VIS) சென்னையின் தலைவருமான முனைவர் ஜி.வி.செல்வத்துக்கு பிறந்த நாள் விழா 26.10.2026 அன்று வேலூரில் நடைபெற்றது. பிறந்த நாளினையொட்டி வேலூரில் மருத்துவ முகாம்க... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் பற்றி சர்ச்சை கருத்து - தப்பிஓடிய வேலூர் திமுக கவுன்சிலர் விழுப்புரத்தில் சிக்கினார்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம் அதிரடியாக கைது ச... மேலும் பார்க்க

US Mid-Term Elections Explained: தப்புவாரா ட்ரம்ப்? - நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?

நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?US Mid-Term Elections"அமெரிக்காவில் ஒரு தேர்தல்… அதில் டிரம்ப் நேரடியாக போட்டியிட இல்லை தான். ஆனால் அவர் எதிர்காலமே அதில்தான் இருக்கிறது! நவம்பர் 3-ல் அமெரிக்காவி... மேலும் பார்க்க

`நீங்க ஊறுகாயா தொட்டுக்க நான் தான் கிடைச்சேனா.?' - சசிகலாவை நீக்கிய அஇபுதமமுக சக்ரவர்த்தி பேட்டி

`அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக'த்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை கட்சியின் தலைவர் சக்ரவர்த்தி நீக்கியிருக்கிறார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கட்சியின் பொ... மேலும் பார்க்க

ஆட்டோ கட்டணம் உயர்வு: '1.8 கி.மீக்கு ரூ.50' - Waiting Charge, இரவு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு

ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.2014-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி இப்போதுதான் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவி... மேலும் பார்க்க