செய்திகள் :

ராணிப்பேட்டை: கடத்தப்பட்ட பெண் குழந்தை 35 நாள்களுக்குப் பிறகு ஆந்திராவில் மீட்பு; 5 பேர் கைது

post image

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் - பிரேமா. இவர்கள் குப்பைகளிலிருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களைச் சேகரித்து காயலான் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய் மூலம் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயதில் மகேஸ்வரி என்ற பெண் குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி இரவு ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானாபாடி மாணிக்கம் நகர்ப் பகுதியில் பழைய பொருள்களைச் சேகரித்துவிட்டு, சாலையோரமாக குழந்தையுடன் படுத்து தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில், குழந்தை மாயமானது.

குழந்தை மீட்பு
குழந்தை மீட்பு

சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையைத் தீவிரமாகத் தேடினர். குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததால் குழந்தையின் புகைப்படத்துடன்கூடிய அறிவிப்பையும் போலீஸார் வெளியிட்டிருந்தனர். குழந்தை பற்றிய துப்பு கிடைக்காததால் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில், 35 நாள்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் வசிக்கும் மல்லீஸ்வரி என்ற பெண்ணின் வீட்டில் இருந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டது தனிப்படை போலீஸ். மல்லீஸ்வரியைக் கைது செய்த போலீஸார், அவரிடம் குழந்தையைக் கடத்தி விற்றதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை: காணாமல்போன 3 சிறுமிகள் கிளாம்பாக்கத்தில் பத்திரமாக மீட்பு; போலீஸார் துரித நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்காள் - தங்கை உட்பட 3 பள்ளிச் சிறுமிகள் நேற்று முன்தினம் மாயமாகினர். இந்தச் சிறுமிகளின் பெற்றோர்கள் கேரளாவில் கிணறு வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: மாயமான 3 மாணவிகளுக்கு என்ன நேர்ந்தது? தீவிர தேடுதலில் போலீஸ்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள், தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர... மேலும் பார்க்க

7 நாள்களில் 7 கொலைகள்; கொலை நகரமாகிறதா தூத்துக்குடி? - காவல்துறை கூறும் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவான கடந்த 21-ம் தேதி பெண்ணிடம் பாலியல் சில்மிஷ விவகரத்தில் வேல்முருகன் என்ற இளைஞர் கல்லால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார். மறுநாள... மேலும் பார்க்க

உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில்... மேலும் பார்க்க

மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகாலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

தேனி: ஷேர் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கைதி; மடக்கிப் பிடித்த போலீஸ்... ஆட்டோ ஓட்டுநர் சொல்வதென்ன?

தேனி மாவட்டம், தக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையிலிருந்து தப்பித்த 17 சிறைக் கைதிகளில் ஏற்கெனவே நான்கு பேர் பிடிபட்டு, கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லிங்க பிரசாத் என்பவரை தேனி மாவட்டம்... மேலும் பார்க்க