செய்திகள் :

திருவண்ணாமலை: மாயமான 3 மாணவிகளுக்கு என்ன நேர்ந்தது? தீவிர தேடுதலில் போலீஸ்

post image

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள், தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவரின் இளைய மகளுக்கு 14 வயதாகிறது. அவரும் அதே பள்ளியில் 9-ம் வகுப்புப் பயில்கிறார். தாய் - தந்தை இருவரும் கேரளாவில் கிணறு வெட்டும் வேலை செய்வதால் 2 மகள்களும் பாட்டியின் அரவணைப்பில் இருந்தனர். இவர்களுடன், இவர்களின் அத்தை மகளான 13 வயது மாணவியும் தங்கி, 8-ம் வகுப்புப் படித்து வந்தார்.

மாயமான 3 மாணவிகள்

இந்த நிலையில், மூத்த மகள் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இளைய மகளும் ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லவில்லையாம். தாய் தினமும் மாலை வேளையில் மகள்களுடன் போனில் பேசுவது வழக்கமாம்.

2 நாள்களுக்கு முன்பு போனில் பேசும்போது, பள்ளிக்குச் செல்லாதது பற்றி கேட்டு திட்டியுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் அத்தை மகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்வதாக அக்காள், தங்கை இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

ஆனால், 3 பேரும் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டுக்கு மீண்டும் வந்து பாட்டிக்குத் தெரியாமல் புத்தகப் பைகளை மறைத்து வைத்துவிட்டு, வெளியே சென்றுள்ளனர். மாலை நீண்ட நேரமாகியும் 3 மாணவிகளும் வீடு திரும்பவில்லை. மாணவிகளிடம் கொடுத்துவைக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாம்.

இது குறித்து, கேரளாவில் உள்ள பெற்றோருக்கு உறவினர்கள் தகவல் தெரியப்படுத்தியிருக்கின்றனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் நேற்று காலை கேரளாவில் இருந்து ஊருக்கு வந்திருக்கின்றனர்.

தீவிர தேடுதலில் போலீஸ்
தீவிர தேடுதலில் போலீஸ்

3 மாணவிகளும் எங்குப் போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பன பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், தண்டராம்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், மாணவிகள் பயன்படுத்திய செல்போன் சிக்னலையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மாணவிகளை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்கிற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதால் தண்டராம்பட்டு பகுதியே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

7 நாள்களில் 7 கொலைகள்; கொலை நகரமாகிறதா தூத்துக்குடி? - காவல்துறை கூறும் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவான கடந்த 21-ம் தேதி பெண்ணிடம் பாலியல் சில்மிஷ விவகரத்தில் வேல்முருகன் என்ற இளைஞர் கல்லால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார். மறுநாள... மேலும் பார்க்க

உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில்... மேலும் பார்க்க

மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகாலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

தேனி: ஷேர் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கைதி; மடக்கிப் பிடித்த போலீஸ்... ஆட்டோ ஓட்டுநர் சொல்வதென்ன?

தேனி மாவட்டம், தக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையிலிருந்து தப்பித்த 17 சிறைக் கைதிகளில் ஏற்கெனவே நான்கு பேர் பிடிபட்டு, கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லிங்க பிரசாத் என்பவரை தேனி மாவட்டம்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னை - வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜே.சி.பி மூலம் வீட்டை இடித்த கும்பல் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமான இரண்டு சர்வே எண்களிலுள்ள 10 சென்ட் நிலத்தை,... மேலும் பார்க்க

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ச... மேலும் பார்க்க