செய்திகள் :

தேனி: ஷேர் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற கைதி; மடக்கிப் பிடித்த போலீஸ்... ஆட்டோ ஓட்டுநர் சொல்வதென்ன?

post image

தேனி மாவட்டம், தக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையிலிருந்து தப்பித்த 17 சிறைக் கைதிகளில் ஏற்கெனவே நான்கு பேர் பிடிபட்டு, கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லிங்க பிரசாத் என்பவரை தேனி மாவட்டம், கானா விளக்கைச் சேர்ந்த சின்ன காளை என்பவரின் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைதுசெய்திருக்கிறார்கள்.

கைதியைப் பிடித்தபோது உடன் இருந்த ஆட்டோ டிரைவர் சின்ன காளை சம்பவம் குறித்து கூறுகையில்,

``வழக்கம்போல சவாரி ஏற்றிக்கொண்டு போகும்போது, பயணியோடு பயணியாக வந்தவர்தான் லிங்க பிரசாத். இவர் ஆட்டோவில் ஏறும்போது, `அண்ணே கானா விளக்கில் இறங்கிக்கிறேன். உங்களுக்கு ஒரு ஆளுக்கு போன் போட்டு கூகுள் பே-ல காசு போடுறேன்... என் கையில காசு இல்ல'ன்னு சொல்லிட்டு ஆட்டோல ஏறினார். அதுக்கு நான், தம்பி என்கிட்ட இப்பதான் போன்ல இருந்து காசு வச்சு டீசல் போட்டேன்னு சொல்லி, கைல காசு கொடுக்கச் சொன்னேன்.

சின்ன காளை

போகும்போதே என் பக்கத்துல முன் சீட்டுல உக்காந்துதான் பேசிக்கிட்டே வந்தார். வரும் வழியிலேயே மெடிக்கல் காலேஜுக்கு பக்கத்துல இருக்க மருந்து குடோன் கிட்ட ஒரு ஏட்டையா வந்து வழிய மறச்சு நிப்பாட்டி, என் பக்கத்துல உக்காந்த பையனைப் பிடிச்ச அப்பதான் தெரிஞ்சது, அவன் சிறைக் கைதின்னு. அப்படியே ஆட்டோல வச்சு தக்கம்பட்டி சிறைக்கு நானும் போலீஸ்காரங்களும் இங்க கூட்டிட்டு வந்துட்டோம்" என்றார்.

உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில்... மேலும் பார்க்க

மதுரை: சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்; 10 வயது சிறுவனுடன் தாய் கைதான பின்னணி என்ன?

மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகாலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நிலப் பிரச்னை - வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜே.சி.பி மூலம் வீட்டை இடித்த கும்பல் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அய்யப்பன். வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சொந்தமான இரண்டு சர்வே எண்களிலுள்ள 10 சென்ட் நிலத்தை,... மேலும் பார்க்க

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் அகிலன் தற்கொலை விவகாரம்; முடிவுக்கு வந்த பெற்றோர் போராட்டம்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ச... மேலும் பார்க்க

தேனி சிறை கைதிகள் தப்பிய விவகாரம்: "காவலரின் தங்க செயின் பறிப்பு" - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி ஓடிய விவகாரத்தில், நேற்று (அக்டோபர் 26 ஆம் தேதி) இரவு பணியில் இருந்த சிறை காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவிட்டிருக்கிறார்.தேன... மேலும் பார்க்க

அசாம்: குத்தகைக்கு விட்ட ஹோட்டலைத் திரும்பக் கொடுக்க மறுப்பு; உரிமையாளர் உட்பட 5 பேர் சுட்டுக்கொலை

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிலாஸ் இன் என்ற ஹோட்டலை கனகாந்த கோகோய் என்பவர் ஹெலனா பராலி என்பவரிடம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். ஹோட்டல் குத்தகையை நீட்டிப்பது தொடர்பாக ஹெலனாவிற்கும், குத்தகை... மேலும் பார்க்க