செய்திகள் :

இந்தியா - சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" - சீனா நிலைப்பாடு

post image

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் ஓரளவு சரியாகி வருகிறது.

2025-ம் ஆண்டு சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்றார் இந்தியப் பிரதமர் மோடி. 2019-ம் ஆண்டு இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, மோடியின் முதல் பயணம் அது.

2019-ம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த மாதம் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

குவோ ஜியாகுன்
குவோ ஜியாகுன்

சீனாவின் நிலைப்பாடு

தற்போது இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து தங்களுடைய நிலைப்பாட்டை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசியுள்ளார்.

“இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பொதுவான புரிதல்களைச் சீனா கண்டிப்புடன் கடைப்பிடிக்கிறது.

மேலும், தனது பிராந்திய இறையாண்மையைப் பாதுகாக்கவும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் வழக்கமான எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவும் இந்தியாவும் தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைத் தொடர்புகளைத் தொடர்ந்து பேணி வருகின்றன.

இரு தரப்பிலும் எட்டப்பட்ட பொதுவான புரிதல்களை இணைந்து செயல்படுத்துவதன் மூலமும்,

உறுதியான நடவடிக்கைகள் மூலம் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் இயல்புநிலையையும் பராமரிப்பதன் மூலமும் இந்தியா சீனாவுடன் இணைந்து செயல்படும் என்று நம்பப்படுகிறது.”

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம் - மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் காவல்துறை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதிக்கு விஜயலட்சுமி, ஹேமலதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நிலையில், ஹேமலதா... மேலும் பார்க்க

அன்பில் கைதும்; முன்னாள் அமைச்சர்களைச் சுற்றும் ஊழல் வளையமும்! - எப்படி எதிர்கொள்ளப் போகிறது திமுக?

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பெறப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கை... மேலும் பார்க்க

`கரூர்ல போட்டுருந்தால்...’ - முதல்வர் குறித்து மிரட்டல் பேச்சு; திமுக கவுன்சிலரைப் பிடிக்க தீவிரம்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று... மேலும் பார்க்க

``பணம் கொடுப்பது மட்டும்தான் லஞ்சமா?" - தவெக அரசைச் சாடும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவங்கங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த செய்திக்குச் சிரிப்புதான் வருகிறது. ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா வறட்சி: 13000 பேர் தற்கொலை? தாலியை அடகு வைத்து கால்நடை தீவனம் வாங்கும் விவசாயிகள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் விதைத்த அனைத்துப் பயிர்களும் கருகிவிட்டன. அதிகமான மாவட்டங்களில் மிகவும் சொற்ப அளவே மழை பெய்துள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை... மேலும் பார்க்க

"கைதிகள் தப்பிய நேரத்திற்கும், போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி" - அன்புமணி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக... மேலும் பார்க்க