செய்திகள் :

குடும்ப வன்முறை: அடிப்பது மட்டும்தான் வன்முறையா? சட்ட பாதுகாப்பும், உதவியும்! சட்டம் சொல்வது என்ன?-7

post image

குடும்பம் என்றால் அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டும். ஆனால், சில வீடுகளுக்குள் அன்புக்குப் பதிலாக அவமானங்களும், அரவணைப்புக்குப் பதிலாக அடிகளும், ஆறுதலுக்குப் பதிலாகக் கண்ணீரும்தான் மிஞ்சுகின்றன. வெளியே சொல்ல முடியாமல், தனக்குள் வலியைச் சுமந்துகொண்டு வாழும் பெண்களும் இருக்கிறார்கள்.

அடிப்பது மட்டும்தான் வன்முறையா? பாதிக்கப்பட்ட பெண்கள் யாரிடம் உதவி கேட்கலாம்? அவர்களுக்குச் சட்டம் வழங்கும் பாதுகாப்பு என்ன?

இதற்கான பதில்களைச் சொல்கிறது பெண்களைக் குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2005 (Protection of Women from Domestic Violence Act, 2005).

அடிப்பது மட்டும்தான் வன்முறையா?

இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன்படி, உடல் ரீதியாகத் தாக்குவது மட்டுமல்ல; பாலியல் ரீதியான துன்புறுத்தல், அவமதித்தல், மிரட்டுதல் போன்ற வாய்மொழி மற்றும் உணர்வுரீதியான துன்புறுத்தல்கள், பொருளாதார ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவையும் குடும்ப வன்முறையாக அமையலாம். வரதட்சணைக் கோரிக்கைக்காகத் துன்புறுத்துவதும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குடும்ப வன்முறையாக அமையலாம்.

சட்டம் சொல்வது என்ன

மௌனம் வேண்டாம்... உதவி கேட்க வழிகள் இருக்கு!

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறை, பாதுகாப்பு அலுவலர் (Protection Officer) அல்லது பதிவு செய்யப்பட்ட சேவை வழங்கும் அமைப்புகளை அணுகலாம். சட்டத்தின் பிரிவு 5-ன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இச்சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய நிவாரணங்கள், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சேவை வழங்கும் அமைப்புகளின் உதவி, இலவச சட்ட உதவி உள்ளிட்ட உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். உடனடி ஆபத்து ஏற்பட்டால் 112 என்ற அவசர உதவி எண்ணையும், பெண்களுக்கான 181 உதவி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.

புகாருக்குப் பிறகு என்ன நடக்கும்?

சட்டத்தின் பிரிவு 12-ன்படி, பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரும் மாஜிஸ்திரேட்டிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பரிசீலித்து, வழக்கின் சூழ்நிலைக்கேற்ப உரிய நிவாரண உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.

வன்முறைக்கு எதிராகச் சட்டக் கேடயம்!

வீட்டின் உரிமை பெண்ணின் பெயரில் இல்லாவிட்டாலும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர் பகிர்ந்து வாழ்ந்த வீட்டில் (shared household) வசிக்கும் உரிமையைப் பிரிவு 17 அங்கீகரிக்கிறது. வன்முறையைத் தடுக்கப் பாதுகாப்பு உத்தரவு (பிரிவு 18), வசிப்பிடம் தொடர்பான உத்தரவு (பிரிவு 19), மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்குப் பண நிவாரணம் (பிரிவு 20), குழந்தைகளின் தற்காலிகக் காவல் (பிரிவு 21), மன உளைச்சல் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு (பிரிவு 22) ஆகியவற்றையும் நீதிமன்றத்திடம் கோரலாம். வழக்கின் சூழ்நிலைக்கேற்ப, சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நீதிமன்றம் இத்தகைய நிவாரணங்களை வழங்கலாம்.

சட்டம் சொல்வது என்ன

வன்முறையில் ஈடுபடுபவர் ஆணாக மட்டும்தான் இருக்க வேண்டுமா?

குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர் ஆணாக மட்டுமே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது.

Hiral P. Harsora v. Kusum Narottamdas Harsora (2016) வழக்கில், குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 2(q)-ல் இருந்த “adult male” என்ற சொற்களை உச்ச நீதிமன்றம் நீக்கியது. எனவே, சட்டத்தின் பிற நிபந்தனைகள் பூர்த்தியாகும் சூழலில், குடும்ப வன்முறையில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராகவும் இச்சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர முடியும்.

மௌனம் தீர்வல்ல; உதவி கேட்பது உரிமை!

குடும்பம் என்ற பெயரில் வன்முறையைச் சகித்துக்கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குள் நடப்பது என்பதற்காக வன்முறை தனிப்பட்ட பிரச்னையாகிவிடாது. தனக்கான உரிமையை அறிந்து, உதவி கேட்க முன்வருவதுதான் மாற்றத்துக்கான முதல் படி!

வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? உரிமையாளர் – வாடகைதாரர் உரிமைகள் என்ன? சட்டம் சொல்வது என்ன? - 6

“அடுத்த மாசத்துக்குள்ள வீட்டைக் காலி பண்ணிடுங்க!”வீட்டு உரிமையாளர் இப்படிச் சொல்லிவிட்டால், ஏற்கெனவே கொடுத்த முன்பணத்தைத் திரும்பப் பெறுவது முதல் அடுத்த வீட்டைத் தேடுவது வரை பல குழப்பங்கள் ஏற்படும். த... மேலும் பார்க்க

போலீஸ் கிட்ட இருந்து `ஆஜராகச் சொல்லி' நோட்டீஸ் வந்தால், பயப்படாதீங்க.! | சட்டம் சொல்வது என்ன? - 5

“போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து உங்களை விசாரிக்க வரச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு…”இந்த ஒரு வார்த்தையே பலரையும் பதற வைக்கும். “என்னை அரெஸ்ட் பண்ணப் போறாங்களா?”, “போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாமா?”, “வக்கீலைக் கூ... மேலும் பார்க்க

உங்களுக்கு லீகல் நோட்டீஸ் வந்திருக்கா? பயப்பட வேண்டாம்! - சட்டம் சொல்வது என்ன? - 4

''உங்களுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கோம்!”இந்த ஒரு வார்த்தையைக் கேட்டாலே, “அய்யய்யோ… நம்ம மேல கோர்ட்ல கேஸ் போட்டுட்டாங்களா?” என்று பலரும் பதற ஆரம்பிச்சுடுவாங்க.ஆனா, முதல்ல ஒரு விஷயத்தைத் தெளிவா ப... மேலும் பார்க்க

திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா... உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்... அந்த நேரத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம பலரும் பதறிப் போயிடுவோம். “எதுக்காக என்னைக் கைது பண்றாங்க?”, “எங்கே கூட்டிட்டுப் போறாங்க?”, ... மேலும் பார்க்க

வாட்ஸ்அப்பில் ஒரு ‘Forward’… சட்டச் சிக்கலாகுமா? சட்டம் சொல்வது என்ன? - 2

“இந்த மெசேஜ் உண்மையா தெரியல... ஆனா நீங்களும் பாருங்க!”இப்படி சொல்லி, ஒருவரைப் பற்றி வந்த தகவலை வாட்ஸ்அப்பில் பலருக்கு பகிர்வது சாதாரணமாகிவிட்டது.ஆனா, அந்தத் தகவல் ஒருவருடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையி... மேலும் பார்க்க

FIR போட்டாலே குற்றவாளியா? – இந்த வார்த்தையைக் கேட்டாலே பயம் ஏன்? - சட்டம் சொல்வது என்ன? - 1

சினிமாவில் போலீஸ் அதிகாரி, "உன் மேல FIR போட்டாச்சு... இனிமே உன்னை யாராலேயும் காப்பாற்ற முடியாது!" என்று கடுமையான குரலில் மிரட்டுவதைப் பார்த்திருப்போம். அதனால் நம்மில் பலருக்கும் FIR என்றாலே ஏதோ நம் எத... மேலும் பார்க்க