செய்திகள் :

Keerthy Suresh: "அப்போது என் பொருளாதார நிலை மோசமாகும் வரை மகிழ்ச்சியாக இருந்தேன்!" - கீர்த்தி சுரேஷ்

post image

கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'அக்கா' வெப் சீரிஸ் இம்மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018-ல் வெளியான திரைப்படத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

Mahanati
Mahanati

இந்தப் படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இருப்பினும், அந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்குத் தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவில்லை என சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், " 'மகாநடி' படத்திற்குப் பிறகு இயக்குநர்களுக்கு என்னை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்பதில் ஒரு குழப்பம் இருந்தது.

'மகாநடி' போன்ற ஒரு படத்திற்குப் பிறகு எனக்கு இன்னும் பெரிய, கதாபாத்திரங்களையே கொடுக்க வேண்டும் என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.

ஆரம்பத்தில் தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் இருந்து எனக்கு ஒரு இடைவெளி கிடைத்தது மகிழ்ச்சியாகவே இருந்தது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

ஆனால், நாட்கள் செல்லச் செல்லத்தான் என்னுடைய நிதி நிலைமை பாதிக்கப்படுவதை உணர்ந்தேன்.

ஆனால் அந்த இடைவேளைதான், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.

இந்த 6 மாத இடைவெளியில்தான் முதன்முதலாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கி, எனது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அது பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது." என்று பேசியுள்ளார்.

Sunainaa: "இந்தச் செயலில் ஈடுபட்டவர் மீது வழக்குத் தொடரவுள்ளேன்!" - சுனைனா

'நீர்ப்பறவை', 'காதலில் விழுந்தேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை சுனைனா.சுனைனா ஏ.ஐ. பயன்படுத்தித் தன்னை ஆபாசமாகவும் தவறாகவும் சித்தரித்து பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்க... மேலும் பார்க்க

காலா : கருப்பும் வெள்ளையும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 36

`சினி'ஸ்கோப் 36காலா : கருப்பும் வெள்ளையும்!”குமாரு, யாரு இவரு?”ஒரு அமைச்சரைக் கைநீட்டி, காலா நக்கலாகக் கேட்கும் காட்சி மிக ரசனையான காட்சி. சூப்பர்ஸ்டாரின் தனித்துவமான தருணங்கள் என்று ஒரு பட்டியலிட்டால... மேலும் பார்க்க

"அண்ணாமலை படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறேன்" - சிவகார்த்திகேயன் ஷேரிங்

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப... மேலும் பார்க்க

'நான் ரஜினி சாரை நேர்ல கூப்பிட்டு பாராட்டுற மாதிரி கிண்டல் பண்றாங்க, ஆனா..!- சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " பெரிய படம், சின்ன படம் என்று பட்ஜெட்ட... மேலும் பார்க்க

"ஹீரோவாக ஏற்ற பின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்.!"- சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் ஆங்கிரிங் பண்ணும்போது எந்த கவலையு... மேலும் பார்க்க