செய்திகள் :

“யுவி சார், அது அவ்ளோ ஈஸி இல்ல!” -யுவராஜின் ஜாலியான கிண்டலுக்கு அபிஷேக் ஷர்மாவின் கூல் பதில்

post image

தனது அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிரவைத்த கையோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற அபிஷேக் ஷர்மா, தனது கிரிக்கெட் ஆசான் யுவராஜ் சிங்கின் சமூக வலைதள நகைச்சுவைக்கு கூலாக பதிலளித்திருக்கிறார். யுவராஜ் சிங்கின் 12 பந்து அரைசத சாதனையை முறியடிக்காதது குறித்து ஜாலியாக கிண்டலடித்ததற்கு, "அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை" என்று அபிஷேக் யதார்த்தமாகப் பேசியுள்ளது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

எளிமையான திட்டமே வெற்றிக்குக் காரணம்!

இந்த ஆட்டத்தில் தனது வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்டபோது, அபிஷேக் ஷர்மா மிகவும் எளிமையாக விளக்கினார். "எங்கள் திட்டம் மிகவும் எளிமையானது. நானும் வைபவும் பவர்பிளேவை முழுமையாக என்ஜாய் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஃபீல்டிங் செய்யும்போதே பிட்ச்சில் கூடுதல் பவுன்ஸ் இருப்பதை கவனித்தோம். மைதானத்தின் அளவுகளையும், பந்துவீச்சாளர்களின் வேகத்தையும் பவர்பிளேவில் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்பினோம். முதல் ஓவரிலேயே வைபவ் அருமையாகத் தொடங்கி, அணிக்குத் தேவையான உத்வேகத்தைக் கொடுத்தார். அந்த உத்வேகத்தைத் தக்கவைத்து ஆடியதே வெற்றிக்கு வழிவகுத்தது" என்று கூறினார்.

வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பு!

தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணி நிர்வாகமும், கேப்டனும் கொடுக்கும் சுதந்திரம் பற்றிப் பேசிய அபிஷேக், அது பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் கடுமையான உழைப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். "இது அவ்வளவு எளிதானது என்று நான் கூற மாட்டேன். திரைக்குப் பின்னால் நாங்கள் செய்யும் தயாரிப்புகளே இதற்குக் காரணம். குறிப்பாக, எங்கள் பயிற்சியாளர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'சைடு ஆர்ம்ஸ்' மூலம் நாங்கள் நிறையப் பயிற்சி செய்தோம். ஒரு பேட்ஸ்மேனாக, களத்தின் சூழல், மைதானத்தின் அளவு மற்றும் பந்துவீச்சாளர்களின் திட்டங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து அதற்கேற்ப ஷாட்களை ஆட வேண்டும். நேற்றைய பயிற்சி முகாமில் நான் சிறப்பாகச் செயல்பட்டேன். அதை இன்றைய போட்டியில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன், அது நடந்தது" என்று தனது வெற்றிக்குப் பின்னணியில் உள்ள உழைப்பைப் பற்றித் தெரிவித்தார்.

யுவராஜின் கிண்டலுக்கு கூல் பதில்!

யுவராஜ் சிங், "12 பந்துகளில் அரைசதம் எனும் எனது ரெக்கார்டு இன்னும் உடைக்கபடவில்லை " என்று சமூக வலைதளத்தில் ஜாலியாக கிண்டலாகப் பதிவிட்டது குறித்துக் கேட்டபோது, அபிஷேக் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். "இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் அந்தக் காலத்தில் என்ன கிரிக்கெட் விளையாடினார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போது அது அவ்வளவு எளிதான காரியமாக அல்ல. எந்தவொரு பேட்ஸ்மேனும் களத்திற்குச் சென்று 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்துவிட முடியாது. அது எப்போதாவது ஒருமுறை நடக்கும் விஷயம். ஒரு பேட்ஸ்மேனாக, நாங்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. அணிக்காக ஆட்டத்தை வெல்வதே எங்கள் முக்கிய நோக்கம். நானும், வைபவும் அதையே விரும்பினோம். இந்தத் தொடர் முழுவதும் இதே அணுகுமுறையைத் தொடர விரும்புகிறோம்" என்று முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.

தொடர்ந்து யுவராஜ் சிங் தனது பதிவில், `என்னால் 30 அல்லது 34 பந்துகளில் உன்னைப்போல் சதம் அடித்துவிட முடியாது" என அபிஷேக்கை மனம் திறந்து பாராட்டியும் இருந்தார்.

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயாஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ... மேலும் பார்க்க

NPL: ஒப்பந்தம் போட்டாச்சு... விளையாட அனுமதி கிடைக்குமா? பாகிஸ்தான் வீரர்களுக்கு வந்த சிக்கல்!

நேபாளத்தில் நடைபெறவுள்ள நேபாள பிரீமியர் லீக் (NPL) டி20 தொடரில் பங்கேற்கப் பல பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீரர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குவதற்கு பாக... மேலும் பார்க்க

"'உடற்தகுதி பெறுங்கள்; அணியில் இடம் உண்டு' என்றார்; ஆனால்...''- கோலி மீது அமித் மிஸ்ரா குற்றச்சாட்டு

காயத்துக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பலாம் என நம்பியிருந்த அமித் மிஸ்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறுகிறார். உடற்தகுதியைப் பெற்றால் அணியில் இடம் கிடைக்கும் என்று விராட் கோலி உறுதியளி... மேலும் பார்க்க

IPL 2027: 'ஆஸ்தான ஆல்ரவுண்டர் டு தலைமைப் பயிற்சியாளர்' - மும்பை இந்தியன்ஸை வழி நடத்த போகும் Pollard

இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸில் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமித்து ஆச்சரியப்படுத்தினார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு "கீரன் பொல்ல... மேலும் பார்க்க

300…200…100! மூன்று ஃபார்மேட்… மூன்று சாதனைகள்! - யார் இந்த ஹாரி புரூக்?

டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு வடிவத்திலும் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று ஃபார்மேட்டிலும் ரன்களைக் குவித்து சாதனைகள் படைத்திருப்பவர் தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக்.1999-ம் ... மேலும் பார்க்க

NZ v IND : "மெகா சேஸிங்கை எளிதாக்கியது அதுதான்.!" - வெற்றி ரகசியத்தை உடைத்த ஸ்ரேயாஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆடுகளத்தின் தன்மை மாறியதும், பனிப்பொழ... மேலும் பார்க்க