`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ - தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி து...
NPL: ஒப்பந்தம் போட்டாச்சு... விளையாட அனுமதி கிடைக்குமா? பாகிஸ்தான் வீரர்களுக்கு வந்த சிக்கல்!
நேபாளத்தில் நடைபெறவுள்ள நேபாள பிரீமியர் லீக் (NPL) டி20 தொடரில் பங்கேற்கப் பல பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீரர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கட்டணம் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது.

ஒரு வீரருக்கு 25,000 அமெரிக்க டாலர்!
மொஹ்சின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நேபாள லீக்கில் விளையாட அனுமதி வழங்க ஒவ்வொரு வீரருக்கும் 25,000 அமெரிக்க டாலர் கட்டணம் கோரியதாக, நேபாள லீக் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. கட்டணக் கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டதா என்பதும் தெளிவாகவில்லை.
காத்திருக்கும் நட்சத்திர வீரர்கள்!
பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் சாஹிப்சாதா ஃபர்ஹான், இஃப்திகார் அகமது, ஹசன் அலி, ஹைதர் அலி, ஹுசைன் தலாத், உசாமா மிர், ஹுனைன் ஷா உள்ளிட்டோர் இந்தத் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நேபாளம் சென்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
PCB ஒப்பந்த விதிகளின்படி, தேசிய அணியின் சர்வதேசப் போட்டிகளுடன் மோதல் இல்லாதபோது வீரர்கள் தனியார் லீக்குகளில் விளையாடலாம். தற்போது, இந்த வீரர்கள் யாரும் பாகிஸ்தானின் டெஸ்ட் அல்லது ஒருநாள் அணிகளில் இடம்பெறவில்லை.

உடனடி டி20 சர்வதேசப் போட்டிகளும் அட்டவணையில் இல்லை. இருப்பினும், கட்டணக் கோரிக்கைக்கும் அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாகவில்லை.
இந்த நிலையில், வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டனர்... தொடர் தொடங்கப்போகிறது… ஆனால், விளையாடுவதற்கான அனுமதி மட்டும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தச் சர்ச்சைக்கு PCB என்ன பதிலளிக்கப் போகிறது? பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டபடி நேபாள லீக்கில் களமிறங்குவார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb



















