செய்திகள் :

``இந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு 'திக் திக்' நிமிடங்களாக மாறிவிட்டது" - திமுக எம்.பி கனிமொழி

post image

தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் குற்றங்களைத் தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயதுக் குழந்தை இதுவரை கண்டுபிடிக்கப்படாமல், அக்குழந்தைக்கு என்ன ஆனது என்றே தெரியாத சூழல் நீடித்து வருகிறது. இடைத்தேர்தல் நடந்து முடிந்த மதுராந்தகம் திருநாகலூரில் ஒரு பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

திருவண்ணாமலை பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போய், பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தப் பெண்களைக் கடத்திச் செல்லும் நோக்கில் வீட்டிற்குள் புகுந்த கும்பல், தாயை வெட்டிக்கொலை செய்துள்ளது. அத்துடன் தந்தையைத் தாக்கி, 10 வயது சிறுவனையும் மிக மோசமாகத் தாக்கியதில் அந்தச் சிறுவன் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். அதேபோன்று செஞ்சியிலும் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத சூழல் நிலவுகிறது.

ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து பல்வேறு கொலைச் சம்பவங்கள், குற்ற நிகழ்வுகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் நேரடியாக ஈடுபடுகின்றனர். 'நாம் எந்தக் குற்றம் செய்தாலும், குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளைச் செய்தாலும் இந்த ஆட்சி நம்மைக் காப்பாற்றும்' என்ற திமிருடனும் தெனாவட்டுடனும் அவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கோ பாதுகாப்பதற்கோ கவனம் செலுத்தாமல், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலேயே தீவிரமாக உள்ளனர். முன்னதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு, `தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, இது நாடா அல்லது காடா?' எனக் கேள்விகளைக் கேட்டு, `நான் ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றிவிடுவேன்' என்று வாக்குறுதி அளித்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆனால், அன்று கேட்கப்பட்ட அதேகேள்வி இப்போதும் இருக்கிறதே... அதனால்தான் இன்று திமுக தலைவரும் அதே கேள்வியை கேட்டிருக்கிறார். அரசு சார்பில் 'தாய்மாமன் சீர்' திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. ஆனால், காப்பாற்ற வேண்டிய தாய்மாமனைக் காணவில்லை. அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. முதலில் அவர்தான் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதை நம்ப வேண்டும். மக்களை, முக்கியமாகக் குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இன்றைய சூழலில் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் ஆபத்து, வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் ஆபத்து என்ற பயத்துடன்தான் பொதுமக்கள் வாழ்கின்றனர். இந்த ஆட்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமே 'திக் திக்' நிமிடங்களாக மாறிவிட்டன." எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! - பின்னணி என்ன?

செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Student List கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. செர்பியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் பயணத... மேலும் பார்க்க

அம்மா குடிநீர்: ``தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தவெக அரசு முடக்கி வைத்திருக்கிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; 'சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு'- கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் ப... மேலும் பார்க்க

முதல் சுற்றில் பின்னடைவு... இரண்டாம் சுற்றில் வெற்றி: மீண்டும் பிரேசில் அதிபராகிறார் லூலா!

முதல் சுற்றுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த லூலா டா சில்வா, அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் சுற்றில் 51.79% வாக்குகளைப் பெற்று பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஃபிளாவியோ போல்சனார... மேலும் பார்க்க

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா' - இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்

லத்தீன் அமெரிக்கா: அரசியல் களம்பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) வெற்றி பெற்று 4-வது முறை அதிபராகத் தேர்வாகியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளில் ல... மேலும் பார்க்க