செய்திகள் :

அம்மா குடிநீர்: ``தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

post image

ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தவெக அரசு முடக்கி வைத்திருக்கிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், ``சென்னை மாநகர மக்களுக்குச் சுத்தமான, சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்கும் உயரிய நோக்கில், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தற்போது செயல்பாடின்றி முடங்கிக் கிடப்பதாக நாளிதழ்களில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள்தோறும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்நிலையங்கள் முடங்கியிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களின் அன்றாடக் குடிநீர்த் தேவைக்காகத் தனியார் நிறுவனங்களிடம் ரூ.40 வரை கொடுத்து ஒரு கேன் தண்ணீரை வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஏற்கெனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி வழங்குவதாக அறிவித்துவிட்டு, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைப் பாலிஷ் செய்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார்களும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஏழை, எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதிலும் தோல்வியடைந்துள்ள தவெக அரசு, தற்போது இலவசக் குடிநீர் வழங்கி வந்த திட்டத்தையும் முடக்கி, மக்கள் தனியாரிடம் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலையை உருவாக்கியிருப்பது, தனியார் தாராளமயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசின் நோக்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது?

இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதிலேயே மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் சூழலில், அவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முடங்கச் செய்திருப்பது தவெக அரசின் மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது.

எனவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உடனடியாக ஆய்வு செய்து, அவற்றைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! - பின்னணி என்ன?

செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Student List கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. செர்பியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் பயணத... மேலும் பார்க்க

``இந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு 'திக் திக்' நிமிடங்களாக மாறிவிட்டது" - திமுக எம்.பி கனிமொழி

தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் குற்றங்களைத் தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; 'சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு'- கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்கற்குளத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் ப... மேலும் பார்க்க

முதல் சுற்றில் பின்னடைவு... இரண்டாம் சுற்றில் வெற்றி: மீண்டும் பிரேசில் அதிபராகிறார் லூலா!

முதல் சுற்றுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த லூலா டா சில்வா, அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் சுற்றில் 51.79% வாக்குகளைப் பெற்று பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஃபிளாவியோ போல்சனார... மேலும் பார்க்க