செய்திகள் :

IPL 2027: 'ஆஸ்தான ஆல்ரவுண்டர் டு தலைமைப் பயிற்சியாளர்' - மும்பை இந்தியன்ஸை வழி நடத்த போகும் Pollard

post image

இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸில் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமித்து ஆச்சரியப்படுத்தினார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு "கீரன் பொல்லார்டை" நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

8 வருடங்களாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தவர்‌ மஹேலா ஜெயவர்த்தனே. அவரது வழிகாட்டுதலில் 2017,2019 மற்றும் 2020 என மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அவர் விலகியதைத் தொடர்ந்து, ஏற்கனவே கடந்த 4 ஐபிஎல் தொடர்களில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கீரன் பொல்லார்டைத் தற்போது தலைமைப் பயிற்சியாளராக பதவி உயர்வு செய்துள்ளது.

பொல்லார்ட்
பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்டகாலத் தொடர்பில் உள்ளவர் பொல்லார்ட், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, அணியில் இவரின் பங்களிப்பு மிகப் பெரியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பொல்லார்ட், பல ஆண்டுகளாக வீரராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றிய பிறகு, இப்போது இந்த அணியை வழிநடத்த உள்ளார்.

2027-ல் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான அப்டேட்கள் நாளுக்கு நாள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தற்போது இந்தப் பதவி உயர்வு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மேலும் வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில், ஒரு வீரருக்கும் அணிக்கும் இடையிலான மிக நீண்ட பிணைப்புகளில் ஒன்றாகத் இது திகழ்கிறது.

பொல்லார்டின் 13 வருட பயணங்கள் !

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கீரன் பொல்லார்ட்

13 ஆண்டுகள் பேட்ஸ்மேனாக விளையாடிய காலத்தில், மொத்தம் 3,915 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் பவுலராக, சிறந்த ஃபீல்டராக... ஏன் அவ்வபோது கேப்டனாகவும் இருந்து தனது முழு மூச்சை டீமுக்காகப் பங்களித்துள்ளார்.

இப்போது அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அணியின் திறன், முக்கிய முடிவுகள் மற்றும் அணியில் உள்ள வீரர்களின் பங்களிப்பு என நன்கு அறிந்தவர் பொல்லார்ட். இந்த நியமனம் மும்பை அணியுடனான அவரது பயணத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளர் பணியில் இணைந்து, பேட்டிங் பயிற்சியாளராகத் தனது அனுபவத்தை மேலும் வளர்த்துக்கொண்டார்.

தனது நியமனம் குறித்துப் பேசிய பொல்லார்ட், ''இந்தப் புதிய பொறுப்பை ஏற்பதில் பெருமிதம் கொள்கிறேன், என் மீது நம்பிக்கை வைத்த நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், அணியின் பாரம்பர்யத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், திறமையான வீரர்களை உருவாக்கவும், ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்திற்கான கூடுதல் தருணங்களை வழங்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பொல்லார்ட்
பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் அணியின் நியூ பிகினிங்‌!

2024-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் இணைந்து கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, மும்பை அணி ஒரே ஒரு முறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது, அதுவும் நான்காவது இடத்தையே பிடித்தது. ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றாக மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள மும்பை இந்தியன்ஸ் முயற்சிக்கும் வேளையில், இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அணியின் சமீபகால சவால்கள், அதன் எதிர்காலப் பயணம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளில் ஒன்றாகவும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் திகழ்வதால், இந்தச் சூழல் முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது பொல்லார்டின் நியமனம், அணியின் உட்புறச் சூழலை நன்கு அறிந்த ஒருவரின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள மும்பை இந்தியன்ஸ்-க்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த அனுபவத்தை வெற்றிகளாக மாற்றி, வரவிருக்கும் சீசனில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற அணியை வலுவாக வழிநடத்த வேண்டிய பொறுப்பும் சவாலும் பொல்லார்டின் முன்னால் உள்ளது.

300…200…100! மூன்று ஃபார்மேட்… மூன்று சாதனைகள்! - யார் இந்த ஹாரி புரூக்?

டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு வடிவத்திலும் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று ஃபார்மேட்டிலும் ரன்களைக் குவித்து சாதனைகள் படைத்திருப்பவர் தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக்.1999-ம் ... மேலும் பார்க்க

NZ v IND : "மெகா சேஸிங்கை எளிதாக்கியது அதுதான்.!" - வெற்றி ரகசியத்தை உடைத்த ஸ்ரேயாஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆடுகளத்தின் தன்மை மாறியதும், பனிப்பொழ... மேலும் பார்க்க

NZ v IND : "'பந்தை பாரு, ஹிட் இட்.!' - இதுதான் எங்கள் திட்டம்!" - ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன்

இந்திய அணி தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், தனது சிறப்பான ஆட்டத... மேலும் பார்க்க

NZ v IND: `இமாலய இலக்கு' - மிரட்டிய சஞ்சு; ஃபினிஷிங்கில் இளம் வீரர்கள் மாஸ்! இந்தியா த்ரில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில், 226 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணி, இளம் வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்,... மேலும் பார்க்க

பிசிசிஐ தேர்வுக் குழுவில் அதிரடி மாற்றம்: புதிய தலைவர் பிரக்யான் ஓஜா!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வீரர்களைத் தேர்வு செய்யும் பிசிசிஐ (BCCI) தேர்வுக் குழுவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா குழுவின் தலைவராக ... மேலும் பார்க்க

``விவாகத்துக்குப் பின் மதுவுக்கு அடிமையானேன்" - கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளருமான யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்... மேலும் பார்க்க