செய்திகள் :

"அங்குதான் அவரைச் சந்தித்தேன்; நினைவுகள் நிறைந்த உலகம்.."- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா

post image

மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார்.

நவம்பர் 10-ஆம் தேதி இந்த நூல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நூல் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை முதல் முறையாகச் சந்தித்தது குறித்தும் அவர்களது காதல் குறித்தும் பகிந்திருக்கிறார்.

சோனியா காந்தி- ராஜிவ் காந்தி
சோனியா காந்தி- ராஜிவ் காந்தி

"கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில்தான் எனது காதல் பயணம் தொடங்கியது. இங்கிலாந்தில் உணவு மிகவும் மோசமாக இருந்தது.

அந்த நாட்களில், இப்போது இருப்பது போல் பல உணவகங்கள் அங்கு இல்லை. அதனால் கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகம்தான் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் சந்திப்பு இடமாக இருந்தது. அங்குதான் தற்செயலாக ராஜீவ் காந்தியைச் சந்தித்தேன்.

சோனியா காந்தி- ராஜிவ் காந்தி
சோனியா காந்தி- ராஜிவ் காந்தி

ராஜீவ் காந்தியின் தோற்றத்தை விட, அவரிடம் இருந்த இயல்பான நற்பண்பும், சாந்தமான சுபாவமுமே தன் மனதைக் கவர்ந்தது அன்பு, சிரிப்பு மற்றும் நினைவுகள் நிறைந்த ஒரு உலகத்தை நாங்கள் உருவாக்கினோம். நவம்பர் 10 ஆம் தேதி, அந்த உலகத்தை முழுமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தலைமைச் செயலக அதிகார... மேலும் பார்க்க

சிவகங்கை: "இலவசங்கள் வேண்டாம்; வேலை கொடுங்க" - 5 வயது மகனுடன் சாலையில் படுத்து கைம்பெண் போராட்டம்

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு, கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.க... மேலும் பார்க்க

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, நெல்லை, வேளாங்கன்னி போன்ற இடங்களில் எழுந்துள... மேலும் பார்க்க

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" - செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” - மேயர் பிரியா குற்றச்சாட்டு

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழகத்தில் வடகிழக... மேலும் பார்க்க

``தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" - அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ் மோகன், ``இந்தியாவில் இஸ்லாமியனாகப் பிறந்தவர்கள் நான் தேசப்பற்று... மேலும் பார்க்க