செய்திகள் :

' இதனால்தான் நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டோம் ' - வெளியான தகவல்

post image

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் காயம் அடைந்தார். இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய 7 பேர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ரயிலில் தப்பி சென்ற மூவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பிடிபட்டனர். துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரித்தபோது, 2022ம் ஆண்டு ஒரு திரைப்பட விளம்பர நிகழ்வின் போது டைகர் ஷெராஃப் நடிகர் சல்மான் கானைப் புகழ்ந்து பேசியதற்காக, அவரை பழிவாங்க லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். ‘ஹீரோபந்தி 2’ திரைப்பட விளம்பர நிகழ்ச்சியின் போது, ​​வழக்கமாக சல்மான் கானின் படங்கள் வெளியாகும் ஈத் பண்டிகை நாளில் இந்தப் படம் வெளியாகவிருப்பது குறித்து டைகர் ஷெராபிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

டைகர் ஷெராப்

அதற்கு அவர், “இந்தத் திரையுலகில் ஒரே ஒரு ‘டைகர்’ (புலி) தான் இருக்கிறார், அவர் சல்மான் சார். அவருக்கு முன்னால் நான் வெறும் பூனைதான். நான் ‘சிம்பா’ (Simba) — அதாவது ஒரு புலிக்குட்டி...” என்று பதிலளித்தார். இந்த நகைச்சுவையான கருத்து, சமூக ஊடகங்களில் வைரலானது.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பூல் சிங் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தனக்கு அதிகம் தெரியாது என்றும், ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் டைகர் ஷெராப் கருத்துக்குப் பழிவாங்க விரும்புவதாகத் இவ்வழக்கில் முக்கிய சதிகாரருமான அனில் பண்டிட் தன்னிடம் கூறியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்று குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். முன்னதாக, இத்தகைய தாக்குதல்களுக்குத் தாங்களே பொறுப்பேற்பதாக இக்கும்பல் குறிப்பிட்டு இருந்தது.

1998-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாய் மான் வேட்டை வழக்கு தொடர்பாக, சல்மான் கான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தக் கும்பல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானுடன் தொடர்புடைய நபர்களுக்கு ஏற்கனவே மிரட்டல்களை விடுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பண்டிட் மற்றும் மற்றொரு கும்பல் உறுப்பினரான ஹர்மன் சாந்து ஆகியோருடையவை எனக் கூறப்படும் ஆடியோ மிரட்டல்களில், சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படத் துறையினரும் இலக்கு வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் டைகர் ஷெராப்பிற்கும் எச்சரிக்கை விடுத்திருந்தனர், ஆனால் அந்த நடிகரும் அவரது தந்தை ஜாக்கி ஷெராஃபும் தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் வரவில்லை என்று மறுத்துள்ளனர்.

சல்மான் கானிடமிருந்து விலகி இருக்குமாறு தனக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறி, அந்தக் கும்பலுடையது எனக் கூறப்பட்டுப் பரப்பப்பட்ட ஒரு ஆடியோ செய்தி இருந்தபோதிலும், திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் தனக்கு அச்சுறுத்தல்கள் வரவில்லை என்று மறுத்திருந்தார். அந்தக் கும்பல் நடிகர்கள் ரன்வீர் சிங், ஆமிர் கான் மற்றும் ஆயுஷ் ஷர்மா ஆகியோரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Aamir Khan: "அதனால்தான் என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்

நடிகர் ஆமிர் கான், சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு 'ஸ்கிரீன் ஐகான்' விருதைப் பெற்றார். Aamir Khanஇந்த நிகழ்வில் மேடையில், தான் இழந்த உறவுகள் குறித்துப் பேசும்போத... மேலும் பார்க்க

Ramayana: ``2014-ல் ஒரு ரசிகரின் கனவு இப்போது நனவாகியிருக்கிறது.!" - மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Ramayana: ``ஏன் வெறுக்கப்படும் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறீங்கனு கேட்டாங்க.!" - நடிகர் யாஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Ramayana: ``ராமாயணத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம்; ஆனால்..." - 'ராமாயணா' குறித்து சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Tiger Shroff: துப்பாக்கிச்சூட்டிற்குத் திட்டம் தீட்டியது எப்படி? குற்றவாளிகளின் வாக்குமூலம் என்ன?

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர துப்பாக்கியை ஏற்பாடு செய்து கொடுத்த 4 பேர் டெல்லி மற்றும் ஹரியான... மேலும் பார்க்க

Ramayana: "சின்ன சின்ன பிரச்னைகளைக் கண்டுக்காதீங்க!" - 'ராமாயணா' படம் குறித்து யஷ்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. Ramayana Trailer - Yashநேற்றைய தின... மேலும் பார்க்க