செய்திகள் :

Aamir Khan: "அதனால்தான் என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்

post image

நடிகர் ஆமிர் கான், சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு 'ஸ்கிரீன் ஐகான்' விருதைப் பெற்றார்.

Aamir Khan
Aamir Khan

இந்த நிகழ்வில் மேடையில், தான் இழந்த உறவுகள் குறித்துப் பேசும்போது கண்கலங்கினார் ஆமிர் கான்.

அவர் பேசுகையில், "கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தபோதுதான் என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். என் வாழ்க்கையின் 30 ஆண்டுகள் ஓடி மறைந்திருந்தன.

ஒரு வேலையின் மீது தீவிரமான ஈடுபாட்டோடு உழைப்பது தவறு கிடையாது. ஆனால், அதையே 30 வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்? அந்த உழைப்பினால் என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்.

என் குழந்தைகள் என் கண்ணெதிரே வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். அவர்களுடன் செலவிட வேண்டிய பொன்னான நேரத்தை நான் இழந்துவிட்டேன் என்ற ஏக்கம் என்னை உலுக்கியது.

அமீர் கான் - Aamir Khan
அமீர் கான் - Aamir Khan

நல்லவேளையாக இந்த எண்ணம் எனக்கு 86 வயதில் வராமல், 56 வயதிலேயே வந்தது சந்தோஷம். 86 வயதில் தோன்றியிருந்தால் எதையுமே மாற்றியிருக்க முடியாது. அதனால் கடந்த 4 ஆண்டுகளாகவே எனது குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன்.

1988-ல் 'கயாமத் சே கயாமத் தக்' படம் மாபெரும் ஹிட் அடித்ததும், அடுத்த 6 மாதங்களில் 9 படங்களில் கையெழுத்திட்டேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் நான் செய்த தப்பு புரிந்தது.

வீட்டிற்கு வந்து என் முன்னாள் மனைவி ரீனாவிடம் அழுது புலம்புவேன். அடுத்தடுத்து அந்தப் படங்கள் தோல்வியடைய, 'ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்தவர்' என என்னை முத்திரையிட்டார்கள்" எனப் பேசியிருக்கிறார்.

Ramayana: ``2014-ல் ஒரு ரசிகரின் கனவு இப்போது நனவாகியிருக்கிறது.!" - மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Ramayana: ``ஏன் வெறுக்கப்படும் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறீங்கனு கேட்டாங்க.!" - நடிகர் யாஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Ramayana: ``ராமாயணத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம்; ஆனால்..." - 'ராமாயணா' குறித்து சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Tiger Shroff: துப்பாக்கிச்சூட்டிற்குத் திட்டம் தீட்டியது எப்படி? குற்றவாளிகளின் வாக்குமூலம் என்ன?

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர துப்பாக்கியை ஏற்பாடு செய்து கொடுத்த 4 பேர் டெல்லி மற்றும் ஹரியான... மேலும் பார்க்க

Ramayana: "சின்ன சின்ன பிரச்னைகளைக் கண்டுக்காதீங்க!" - 'ராமாயணா' படம் குறித்து யஷ்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. Ramayana Trailer - Yashநேற்றைய தின... மேலும் பார்க்க

Tiger Shroff: "வெளிநாட்டு வேலை, அதிக பணம்..." - துப்பாக்கியால் சுட்டவர்கள் சிக்கியது எப்படி?

மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனா... மேலும் பார்க்க