செய்திகள் :

அர்னாப் புயல் வருகிறது? `வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - மழை தீவிரமாகும் வாய்ப்பு! | Live

post image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் பகுதியிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதனிடையே, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக்கடலில் நிலவிய வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால், இன்று (அக்டோபர் 23) காலை 05:30 மணி அளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Rain Alert - மழை
Rain Alert - மழை

இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நீடித்து, அக்டோபர் 24-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதைத் தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25 அன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26 காலை வாக்கில் மேற்கு-மத்திய வங்கக்கடலில் சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

மேலும் வலுவடையும் இந்த புயல், அடுத்த இரு தினங்களில் வட ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் அக்டோபர் 26-ம் தேதி புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு 'அர்னாப்' (ARNAB) எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயரை வங்கதேசம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில், தற்போது உருவெடுத்துள்ள இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மழைப் பொழிவு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு; தாய் காயம் - சாத்தூர் சோகம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெய்த பலத்த மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் மாணவியின் தாயும் காயமடைந்துள்... மேலும் பார்க்க

Rain Alert: கொட்டித் தீர்த்த கனமழை; 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், கோவை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் ... மேலும் பார்க்க

'வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி' - தமிழகத்தில் 26-ம் தேதி வரை மிகக் கனமழை!

2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதி வரை கொளுத்திய வெயில், இப்போதுதான் லீவு எடுத்திருக்கிறது.கடந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.நேற்று (அக்டோபர் 21) இந்திய வானிலை மைய... மேலும் பார்க்க

Rain Alert: 5 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை; உங்க ஊரில் கனமழையா, மிகக் கனமழையா?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழையோடு, சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் இன்று (அக்டோபர் 22) காலை விடிந்திருக்கிறது.சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின்படி,இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

`26-ம் தேதி வரை மழை... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்' - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்!

வரும் அக்டோபர் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு கடல் மற்றும் ... மேலும் பார்க்க

Rain Alert: சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு லீவ்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வருகிற 26-ம் தேதி வரை, தமிழ்நாட்டில் அதிக கனமழை முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.எங்கெல்லாம் மழை?செ... மேலும் பார்க்க