செய்திகள் :

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” - மேயர் பிரியா குற்றச்சாட்டு

post image

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் அதே வேளையில், டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

நடப்பாண்டில் இதுவரை 25,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 70 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 332 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, " திமுக ஆட்சியில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடுகளில் சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தோம். முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநகராட்சி முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் வெற்றியை கொண்டாடுவதில் இவ்வளவு காலம் சென்று விட்டது. அவர்களின் மெத்தன போக்கே டெங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" - செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க

``தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" - அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ் மோகன், ``இந்தியாவில் இஸ்லாமியனாகப் பிறந்தவர்கள் நான் தேசப்பற்று... மேலும் பார்க்க

``புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்..." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ``2029-ல் எல்லோரும் இணைந்து வென்றாக வேண்டும். இந்தியாவ... மேலும் பார்க்க

கேரள லோக்பவனில் இனி சைவ சமையல் மட்டுமே! - புதிய கவர்னர் பதவியேற்றதும் உத்தரவு

சிக்கிம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மாத்துர், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டு நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கேரளத்தின் 29-வது கவர்னர் ஆவார். முன்னதாக, கேரளா மற்றும் தமிழகத... மேலும் பார்க்க

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ - சோளிங்கர் ரவி பதிலடி

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான `ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து `ஹிட்’ அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் வன்மத்துடன் கமெண்ட்ஸுகளை பதிவிட்டுவந்த நபர்களுக்கு பதிலடி தரும்விதமாக... மேலும் பார்க்க