செய்திகள் :

கணவன்-மனைவி பிரச்னையைத் தீர்ப்பதாக நடித்த போலீஸ் ஏட்டு; இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியது அம்பலம்

post image

கன்னியாகுமரி மாவட்டம் ​கருங்கல் அருகே நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்தவர் ஷாலினி (37). இவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஜோசப் மெசியா தாஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு கருங்கல் காவல் நிலையத்திற்குப் புகார் அளிப்பதற்காக ஷாலினி சென்றுள்ளார்.

அப்போது தனிப்பிரிவு ஏட்டாக இருந்த சாம்சன் (45), ஷாலினியின் போன் நம்பரைப் பெற்றுக்கொண்டு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி அவருக்கு ஆதரவாக இருப்பதுபோன்று நடித்துள்ளார். இதையடுத்து அன்று இரவே வாட்ஸ்அப் காலில் போன் செய்த சாம்சன், கனிவாகப் பேசியுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணம் ஆகவில்லை என ஷாலினியிடம் கூறிய ஏட்டு சாம்சன் பலமுறை அவருடன் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஷாலினியின் வீட்டிலேயே தங்கி அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதில் ஷாலினி கர்ப்பமாகியுள்ளார்.

கர்ப்பமான தகவலை சாம்சன் அறிந்ததும், ஷாலினியிடம் அவரது கணவரை வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வரவழைக்கும்படி கூறியுள்ளார். ஷாலினியின் கணவரும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து ஒரு மாதம் இருந்து விட்டு மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

கர்ப்பமாக இருந்த ஷாலினியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு உதவியுள்ளார் சாம்சன். அதன் பிறகு ஷாலினிக்கு குழந்தை பிறந்துள்ளது. இனியாவது திருமணம் செய்துகொள்ளும்படி சாம்சனிடம் ஷாலினி கேட்டுள்ளார். ஆனால், ஷாலினியைத் திருமணம் செய்ய முடியாது எனவும், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது எனவும் சாம்சன் கூறியுள்ளார்.

இருப்பினும் தன்னை திருமணம் செய்யுமாறு சாம்சனைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் ஷாலினி. இதனால் பொறுமை இழந்த சாம்சன் ஒருகட்டத்தில் ஷாலினியையும், குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

தனிப்பிரிவு ஏட்டு சாம்சன்
தனிப்பிரிவு ஏட்டு சாம்சன்

ஏட்டு சாம்சனின் மிரட்டலை அடுத்து ஷாலினி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மிரட்டல், ஏமாற்றுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் தனிப்பிரிவு ஏட்டு சாம்சன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாம்சன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மாறுதலாகி சென்றுவிட்டு மீண்டும் தற்போது கருங்கல் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக வந்து உள்ளார். இந்த நிலையில் அவர்மீது பாலியல் வழக்கு பாய்ந்ததால் தலைமறைவாக உள்ளார்.

மும்பை: தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது; பின்னணி என்ன?

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொகமத் ஹசன் அபு அக்பர் என்ற அந்த நபர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக... மேலும் பார்க்க

காரைக்குடி: காதலனின் நண்பனுடன் வெளியேறிய காதலி - கொலையில் முடிந்த முக்கோணக் காதல் கதை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் சாலையில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வெண்ணில... மேலும் பார்க்க

விஜயதசமி கொண்டாட்டம்: வானைநோக்கி AK 47-ஆல் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி; நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் அங்கிதா சர்மா. கடந்த அக்டோபர் 20-ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு, காவல் ஆயுதப் படையில் நடைபெற்ற 'சாஸ்திர பூஜை' நிகழ்வ... மேலும் பார்க்க

குமரி: கல்லூரி மாணவிக்கு காரில் லிஃப்ட் கொடுத்து பாலியல் தொல்லை; த.வெ.க நிர்வாகி மீது வழக்கு!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச... மேலும் பார்க்க

கோவை: சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் உயிரை மாய்த்த விவகாரம்; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர், கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ... மேலும் பார்க்க

காதல் விவகாரத்தில் சிறுமியின் தாயார் வெட்டிக் கொலை: அப்பா, அண்ணன் படுகாயம்; இளைஞர் வெறிச்செயல்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு இரண்டு மகள்களும், பிளஸெட் ராஜா என்ற மகனும் உள்ளனர். முத்துக்கிருஷ்ணனின் மூத... மேலும் பார்க்க