செய்திகள் :

தனுஷ் ரசிகர்கள் சந்திப்புக் கூட்டம்: இடம் கொடுத்த CM விஜய்க்கு நெருக்கமான கல்லூரி? விவரம் என்ன?

post image

நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறார். தவெக, அதிமுக, அமமுக எனப் பல கட்சியினரும் தனுஷின் அரசியல் வருகை குறித்து பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை சென்னையில் தன்னுடைய பெண் ரசிகைகளுக்கெனத் தனி சந்திப்பு நிகழ்ச்சியை தனுஷ் ஏற்பாடு செய்திருக்கிறார்.

Dhanush
Dhanush

ரசிகர் மன்றக் கூட்டங்கள், நலத்திட்டப் பணிகள், நற்பணி இயக்கம் எனத் தன்னுடைய கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் தனுஷ் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார். இதனால் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா எனும் பேச்சும் எழுந்துள்ளது.

தவெகவின் முக்கிய அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் போன்றோரே தனுஷின் அரசியல் ஆசை குறித்து விமர்சித்து பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு பெரிய ரசிகர் சந்திப்புக்கு தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் இருந்து பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து இந்தச் சந்திப்பை நடத்தவிருக்கிறாராம்.

Dhanush
Dhanush

இதுதொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். ''குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழக்கமாக தலைவர் ரசிகர்களைச் சந்திப்பார். இந்த முறை கொஞ்சம் ஸ்பெசலாக முழுக்க முழுக்க பெண் ரசிகைகளைச் சந்திக்கிறார். தமிழகம் முழுவதுமிருந்து 2500-3000 பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறோம்.

நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்துக்காக முதலில் அடையாறு, வடபழனி பகுதிகளில் இடம் பார்த்தோம். சரியாக எந்த இடமும் கிடைக்கவில்லை. அதனால் OMR இல் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் பார்த்திருக்கிறோம். அங்கேதான் நாளை இந்த ரசிகைகள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவிருக்கிறோம். தலைவர் சொல்வதைச் செய்கிறோம். எல்லாம் அவர் விருப்பம்'' என்கின்றனர்.

தனுஷின் ரசிகைகள் சந்திப்பு நடக்கவிருக்கும் தனியார் கல்லூரி தவெக அமைச்சர் ஒருவரின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது ஹைலைட். உளவுத்துறையினரும் தனுஷின் மூவ்களைக் கவனமாக நோட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கூட்டணியா(?)

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" - என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்திருக்கிறார். அப்போது, 'தனுஷ் அதிமுகவிற்கு வருகிறாரா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நடிகர் வந்துதான் அதிமுகவ... மேலும் பார்க்க

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' - உண்மை என்ன?

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தலைமைச் செயலக அதிகார... மேலும் பார்க்க

"அங்குதான் அவரைச் சந்தித்தேன்; நினைவுகள் நிறைந்த உலகம்.."- ராஜீவ் காந்தியுடனான காதல் குறித்து சோனியா

மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். நவம்பர் 10-ஆம் தேதி இந்த நூல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த... மேலும் பார்க்க

சிவகங்கை: "இலவசங்கள் வேண்டாம்; வேலை கொடுங்க" - 5 வயது மகனுடன் சாலையில் படுத்து கைம்பெண் போராட்டம்

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு, கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.க... மேலும் பார்க்க

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு, நெல்லை, வேளாங்கன்னி போன்ற இடங்களில் எழுந்துள... மேலும் பார்க்க

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" - செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து செய்த... மேலும் பார்க்க