செய்திகள் :

Rain Alert: 'உருவாகும் முரசு புயல்'- தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

post image

தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நிலை கொண்டுள்ள காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்​பட உள்​ளது.

புயல்
புயல்

புயல் உருவாக இருக்கும் சூழலில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பதைப் பார்ப்போம்.

மழைத் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," இன்று (நவ.1)வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மழை
மழை

நாளை (நவ.2)நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: வருகிற 2-ம் தேதி வங்கக் கடலில் புயல்? தமிழ்நாட்டில் எங்கெங்கே மழை? வானிலை மைய அப்டேட்!

இந்திய வானிலை மையம் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளது.“தெற்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக... மேலும் பார்க்க

பூடான்: `பனிப்பாறை ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு' - மேற்கு வங்கம், அசாமுக்கு எச்சரிக்கை

பூடான் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள காசா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷிந்தாபு பனிப்பாறை ஏரி. மோ சூ ஆற்றின் உற்பத்தியிடத்தில் அமைந்துள்ள ஷிந்தாபு ஏரி, பூடானின் 17 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளில் ஒன்றாகக... மேலும் பார்க்க

`நொய்யல் ஆற்று நுரைக்கு சோப்பு, ஷாம்பு கலப்பதும்‌கூட காரணம்!' - சுற்றுச்சூழல் அமைச்சர் அடடே விளக்கம்

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி வழியும் பிரச்னைக்கு, பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத... மேலும் பார்க்க

Arnab: 3 மணிநேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்; வானிலை மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் அர்னாப் புயல் நிலைகொண்டுள்ளது.இந்திய வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி,“ஆந்திரக் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண... மேலும் பார்க்க

‘மிகக் கடும் புயலாக’ Arnab புயல்: சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம்... துறைமுகங்களுக்கு அலர்ட்!

அர்னாப் புயல் குறித்து இந்திய வானிலை மையம் கொடுத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்...“மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘அர்னாப்’ கடும் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் ... மேலும் பார்க்க

Rain Alert: நாளை 'மிகக் கடும் புயலாக' மாறும் Arnab; தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? இன்று ஆரஞ்சு அலர்ட்!

வங்கக்கடலில் தற்போது ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளது.அர்னாப் புயல்இது குறித்த இந்திய வானிலை மையத்தின் அப்டேட்...“மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்ற... மேலும் பார்க்க