செய்திகள் :

ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை! திடீர் நஷ்டத்தினால் பரிதவிக்கும் கிரிப்டோகரன்ஸி முதலீட்டாளர்கள்!

post image

கிரிப்டோகரன்ஸியில் ஹேக்கிங் செய்வதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை போவது அடிக்கடி நடக்கக்கூடிய சம்பவமாகிவிட்டது. கடந்த வியாழக்கிழமை அன்று வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் பினான்ஸ் எனப்படும் மிகப் பெரிய கிரிப்டோகரன்ஸி நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்சுக்குள் நுழைந்து, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்ஸிகளை வெறும் 20 நிமிடங்களுக்குள் கொள்ளை அடித்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால் பல வகையான கிரிப்டோகரன்ஸிகளின் விலை குறைந்து, அதில் பணம் போட்டவர்களுக்குக் கணிசமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது!

கிரிப்டோகரன்ஸிகள் டிஜிட்டல் வடிவிலான சொத்துக்களாக உள்ளன. பணத்தைப் போலவோ, தங்கத்தைப் போலவோ இவற்றைப் பீரோவில் வைத்துப் பாதுகாக்க முடியாது. பணமும் தங்கமும் டிஜிட்டல் வடிவில் இருக்கும்போது சில சமயங்களில் கொள்ளை போய்விடுகிறது. ஆனால், கிரிப்டோகரன்ஸிகளை உருவாக்கும் ப்ளாக்செயின் டெக்னாலஜி தெரிந்த சில தொழில்நுட்ப ஜாம்பவான்கள் சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்ஸிகளைக் கொள்ளை அடித்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.

இப்படிக் கொள்ளை போவதால், இந்த கிரிப்டோகரன்ஸிகளை வாங்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்களின் பணமும், மக்களின் பணமும்தான் கொள்ளை போகிறது. கிரிப்டோகரன்ஸிகளின் பணம் கொள்ளை போவது ஒருபக்கம் எனில், இதனால் பல வகையான கிரிப்டோகரன்ஸிகளின் விலை குறைந்து, நஷ்டம் அடைவது இன்னொரு வேதனை.

டிரேடிங்

பொதுவாக, கிரிப்டோகரன்ஸிகளுக்கு உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) எதுவும் கிடையாது. டிமான்ட் மற்றும் சப்ளை ஆகியவற்றின் காரணமாகத்தான் அவற்றின் விலை உயர்கிறது அல்லது குறைகிறது. கிரிப்டோகரன்ஸியில் பணம் போட்டால், நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டுத்தான் பலரும் போடுகிறார்கள். ஆனால், எவ்வளவு லாபம் கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பதற்கு எந்த வகையான உத்தரவாதமும் இல்லை. தவிர, நஷ்டம் வந்தால், மிகப் பெரிய அளவில் நஷ்டம் வரும் என்பதற்குக் கடந்த காலத்தில் பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்ஸியின் விலைப்போக்கைப் பார்த்தாலே புரியும்.

ஓராண்டுக்கு முன்பு ஒரு கிரிப்டோகரன்ஸியின் விலை 97 லட்சம் ரூபாய்க்கு மேல். ஆனால், பிப்ரவரி மாதத்திலேயே அது 58 லட்சம் ரூபாயாகக் குறைந்தது. மே மாதத்தில் மீண்டும் 77 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. ஜூலை மாதத்தில் மீண்டும் 56 லட்சம் ரூபாயாகக் குறைந்தது. கடந்த செப்டம்பர் மாதக் கடைசியில் 80 லட்சம் ரூபாயாக மீண்டும் உயர்ந்தது. தற்போது பினான்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்சில் நடந்த கொள்ளைச் சம்பவத்துக்குப்பிறகு பிட்காயினின் விலை மீண்டும் 3 லட்சம் ரூபாய் குறைந்து, 73 லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் ஆகிறது.

டிரேடிங்

பொதுவாக, அதிகளவில் ஏற்றமும் இறக்கமும் இல்லாத ஒரு சொத்தில் பணம் போட்டு லாபம் சம்பாதிக்கத்தான் மக்கள் விரும்புவார்கள். பங்குச் சந்தைகளில் மக்கள் பணம் போடத் தயங்குவதற்குக் காரணம், சந்தை இறங்கினால் நஷ்டம் வந்துவிடுமே என்பதற்காகத்தான். ஆனால், கிரிப்டோகரன்ஸியில் பணம் போட்டால், மிகப் பெரிய அளவில் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை உணராமலேயே தமிழகத்தைச் சேர்ந்த சாதாரண மக்கள் அதில் பணம் போட்டு வருகிறார்கள். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பலரும் இதில் பணம் போட்டு வருகிறார்கள். மிகப் பெரிய அளவில் நஷ்டம் வந்தால், இவர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வி.

எனவே, அதிக லாபமும் அதிக நஷ்டமும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ள இந்த கிரிப்டோகரன்ஸிகளில் பணம் போடுவதைத் தவிர்த்து, நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட ஓரளவு நல்ல லாபம் தரக்கூடிய சொத்துகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான விஷயமாக இருக்கும். பேராசை பெருநஷ்டம் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?

Labham Logo

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

ஏ.ஆர்.குமார் - 89259 44568

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

Vikatan Wealth Pvt Ltd - ARN - 310095

Financial Future Simulator: வயது 40. SIP ₹10000 |60-ல் நிதி சுதந்திரம் அடைய துல்லிய கணக்கு வேண்டுமா?

அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு வைக்கப்பட்ட நிபந்தனை நினைவிருக்கிறதா? "30 நாளில் 30 கோடியைச் செலவழிக்க வேண்டும்; ஆனால் எந்தச் சொத்தும் சேரக்கூடாது."அதைத்தான் நாமும் நம்மை அறியாமல் செய்து கொண்டிருக்கிறோ... மேலும் பார்க்க

50 ஃபண்டுகளில் முதலீடு... Mutual Fund-ல் டைரக்ட்-ஆக முதலீடு செய்பவர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இரு வகைகளில் முதலீடு செய்யலாம். ஒன்று, ரெகுலர்; மற்றொன்று, டைரக்ட். ரெகுலர் முறை என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலம் முதலீடு செய்வது; டைரக்ட் என்பது மியூச்... மேலும் பார்க்க

பங்குச் சந்தை: மேல ஏறுமா ஏறாதா? நம்பலாமா நம்பப்படாதா?

"எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்!" - சூப்பர் ஸ்டாரின் இந்த டயலாக் மாதிரிதான் நம்ம இந்திய பங்குச் சந்தையின் தற்போதைய நிலையும்.கடந்த 3 ஆண்டுகளாகவே இந... மேலும் பார்க்க

JIO: உக்கிரமாகும் முகேஷ் அம்பானி... பங்குச் சந்தையில் முதல் நாளே ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளிய ஜியோ!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இன்று அந்த இடத்தை இன்னும் வலுவாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். அவருடைய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இன்று பங்குச் சந்தையில் பட்டியலாகி பட்டையைக் கிளப்பி... மேலும் பார்க்க

Financial Plan: சம்பாத்தியம் மட்டும் போதுமா? உங்கள் குடும்பத்திற்கு ‘ஃபினான்சியல் பிளான்’ இருக்கா?

மாதம் ₹50000 - ₹1 லட்சம் சம்பளம். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறீர்கள். EMI, வீட்டுச் செலவு, குழந்தைகள் ஃபீஸ் போக, எஞ்சிய பணத்தைச் சேமிக்கிறீர்கள்; அவ்வப்போது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்/NPS போன்ற ... மேலும் பார்க்க