செய்திகள் :

பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்... போலீஸார் குவிப்பு!

post image

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.  இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கறி கடை  நடத்தி வருவதுடன் வேன் டிரைவராகவும் பணிபுரிந்து வந்தார்.  இந்த நிலையில்,  இன்று  காலையில் மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகளை வாங்கிவிட்டு தனது கடையில் காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு  சென்றுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பாலமுருகன்

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை  அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே  பாலமுருகன் உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த படு பயங்கர படுகொலை நடந்துள்ளதால் இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

அந்தப் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சி ஒன்றிற்கு டிஜிட்டல் பேனர் அமைப்பதில் ஏற்பட்ட தகராறு  காரணமாக இந்தப் படுகொலை நடந்துள்ளதாக  கூறப்படுகிறது. குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மண்டல டி.ஐ.ஜி திருநாவுக்கரசர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் நேரில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தாளமுத்துநகர் காவல் நிலையம்

பின்னர், கொலை செய்யப்பட்ட பாலமுருகனின் உறவினர்களிடம் குற்றவாளிகள்  உடனே கைது செய்யப்படுவார்கள்  என உறுதியளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி திருநாவுக்கரசர், “பாலமுருகன் கொலை சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள்” என்றார். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில்... மேலும் பார்க்க

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம... மேலும் பார்க்க

திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 35 நபர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அந்த ... மேலும் பார்க்க

குடியாத்தம்: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் - டெலிவரி ஊழியரால் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கள்ளூர் பகுதி நேரு நகரைச் சேர்ந்த 46 வயதான ரஃபீக் அகமது, தரணம்பேட்டையில் உணவகம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ரஃபீக் அகமது `ஃபிளிப்கார்ட்’ மூலம் பொர... மேலும் பார்க்க

ஆந்திரா: பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகள் மீது ரம்பத்தால் தாக்குதல்; தப்ப முயன்ற இளைஞர் கைது!

ஆந்திரா மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ​​21 வயது இளைஞர் ஒருவர், மின்சாரத்தால் இயங்கும் ரம்பத்துட... மேலும் பார்க்க

கோவை: கைதி தப்பியோடிய விவகாரம் – எஸ். ஐ உட்பட 4 போலீஸார் சஸ்பெண்ட்!

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்,... மேலும் பார்க்க