செய்திகள் :

ரூ.3 லட்சம் கடனால் நெருக்கடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்!

post image

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்ஙனாச்சேரி எஸ்.பி. கல்லூரி அருகே கரிங்கடயில் பகுதியில் வசித்து வந்தவர் ஸாஜூ (64). இவரது மனைவி அனு (59). இவர்களுக்கு சவின் (33) என்ற மகன் இருந்தார். வழக்கமாக காலையில் வெளியே வரும் ஸாஜூ மற்றும் அனு ஆகியோரை நீண்ட நேரமாகக் காணாததால் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஸாஜூவின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர். கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் திறக்கப்படவில்லை. இதையடுத்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஸாஜூ, அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஸாஜூ மற்றும் அனு ஆகிய இருவரும் படுக்கையறையிலும், மகன் சவின் வீட்டின் ஸ்டோர் ரூமிலும் தூக்கிட்ட நிலையில் சடலமாகத் தொங்கினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஸாஜூ மற்றும் அனு இணைந்து எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பலரிடம் இருந்தும் கடன்பெற்ற சுமார் 3 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும், அந்தக் கடனை அடைத்துவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை
தற்கொலை

ஸாஜூ நீண்ட காலமாகக் கோன்னியில் மளிகைப் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வந்தார். அண்மையில் அந்த வியாபாரத்தை நிறுத்தியதில் அவருக்குக் கடுமையான கடன் சுமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி அனு வீட்டின் மாடியில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்தார். மகன் சவினுக்கு ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலம் நிதி இழப்பு மற்றும் கடன் நெருக்கடி இருந்ததாகக் கூறப்படுகிறது. சவினின் மனைவி வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். முதற்கட்ட விசாரணையில், பெற்றோர் முதலில் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அவர்கள் இறந்ததைக் கண்டு மனமுடைந்த மகன் சவினும் பின்னர் அதே முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

ஒரரே குடும்பத்தில் தற்கொலைசெய்துகொண்ட மூவர்

உயிரிழந்தவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் செல்போன்களைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி. எஸ்.அஷாத் தெரிவித்தார். மூவரின் உடல்களும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், செத்திப்புழா செயின்ட் தாமஸ் மருத்துவமனைப் பிணவறைக்கு மாற்றப்பட்டன. உடற்கூறு ஆய்வு முடிவுகள் மற்றும் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் விசிக முன்னாள் நிர்வாகி படுகொலை; தூத்துக்குடியில் பதற்றம்... போலீஸார் குவிப்பு!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர். மேலும் இந்த பகுதியில் காய்கற... மேலும் பார்க்க

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம... மேலும் பார்க்க

திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 35 நபர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அந்த ... மேலும் பார்க்க

குடியாத்தம்: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் - டெலிவரி ஊழியரால் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கள்ளூர் பகுதி நேரு நகரைச் சேர்ந்த 46 வயதான ரஃபீக் அகமது, தரணம்பேட்டையில் உணவகம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ரஃபீக் அகமது `ஃபிளிப்கார்ட்’ மூலம் பொர... மேலும் பார்க்க

ஆந்திரா: பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகள் மீது ரம்பத்தால் தாக்குதல்; தப்ப முயன்ற இளைஞர் கைது!

ஆந்திரா மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ​​21 வயது இளைஞர் ஒருவர், மின்சாரத்தால் இயங்கும் ரம்பத்துட... மேலும் பார்க்க

கோவை: கைதி தப்பியோடிய விவகாரம் – எஸ். ஐ உட்பட 4 போலீஸார் சஸ்பெண்ட்!

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்,... மேலும் பார்க்க