செய்திகள் :

திருப்பூர்: முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த போலீஸ் ஏட்டு; ரௌடியின் புகாரால் சிக்கியது எப்படி?

post image

திருப்பூர் மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 35 நபர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அந்த நபரை சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இணைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த நபரின் மனைவி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் பல இடங்களிலும் தேடிப் பார்த்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போன் எண்ணிற்கு சென்ற அழைப்புகளை ஆய்வு செய்து பார்க்கையில், தலைமைக் காவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் நாள்தோறும் பலமுறை செல்போனில் தொடர்புகொண்டு பேசியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டிருக்கிறார்கள்.

police

இதான் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ரௌடி கணவனை கண்காணிப்பதாகச் சொல்லி அவன் மனைவியிடம் அறிமுகமாகி செல்போன் நம்பரை வாங்கியிருக்கிறார் நல்லூர் ஸ்டேஷன் ஏட்டு அலெக்ஸ் பாண்டியன். நாள்தோறும் அந்த பெண்ணிற்கு 30 முறைக்கு மேல் போன் செய்து தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அதோடு ரௌடியின் மனைவியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் அந்த பெண் திடீரென தலைமறைவாகியிருக்கிறார். சம்பந்தப்பட்ட காவலர் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் அந்த பெண் தலைமறைவானாரா மற்றும் காவலர் எந்த மாதிரியான பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றனர்.

மது போதையில் போலீஸாரை தாக்கிய போதை கும்பல்; சிகிச்சையிலிருந்த ஊர்காவல் படை வீரர் உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிந்தனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம... மேலும் பார்க்க

குடியாத்தம்: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் - டெலிவரி ஊழியரால் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கள்ளூர் பகுதி நேரு நகரைச் சேர்ந்த 46 வயதான ரஃபீக் அகமது, தரணம்பேட்டையில் உணவகம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ரஃபீக் அகமது `ஃபிளிப்கார்ட்’ மூலம் பொர... மேலும் பார்க்க

ஆந்திரா: பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகள் மீது ரம்பத்தால் தாக்குதல்; தப்ப முயன்ற இளைஞர் கைது!

ஆந்திரா மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ​​21 வயது இளைஞர் ஒருவர், மின்சாரத்தால் இயங்கும் ரம்பத்துட... மேலும் பார்க்க

கோவை: கைதி தப்பியோடிய விவகாரம் – எஸ். ஐ உட்பட 4 போலீஸார் சஸ்பெண்ட்!

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற பரபரப்பு அடங்காத நிலையில், கோவை சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பியோடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்,... மேலும் பார்க்க

வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: ஆந்திராவில் அதிர்ச்சி! - என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்குள் ... மேலும் பார்க்க

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முதியவர்; மருத்துவமனையிலிருந்து தப்பி ஒட்டம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து கைதிகள் சிறைகளிலிருந்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னை புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடினர். அதைத் தொடர்ந்து தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் த... மேலும் பார்க்க